டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆவது நபராக ஜாம்பவான் பட்டியலில் இணைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் – ரசிகர்கள் வாழ்த்து

Mathews
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் 100 போட்டிகளில் விளையாடுவது என்பது சாதாரண விடயம் கிடையாது. ஏனெனில் ஒரு வீரரின் திறமையை உண்மையாக சோதித்து பார்க்கும் வடிவம் கிரிக்கெட்டில் எது என்று கேட்டால் ரசிகர்கள் பலரும் கூறும் ஒரே வார்த்தை டெஸ்ட் கிரிக்கெட் மட்டும்தான். ஏனெனில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த வடிவத்தில் திறமை இருந்தால் மட்டுமே வீரர்களால் நிலைத்து நிற்க முடியும். அந்த வகையில் சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் விராட் கோலி இணைந்தார்.

Angelo Mathews

- Advertisement -

அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணியைச் சேர்ந்த அணியின் நட்சத்திர வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று துவங்கியுள்ள பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100-ஆவது போட்டியில் விளையாடுகிறார்.

ஏற்கனவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி தங்களது முதல் இன்னிசை விளையாடி வருகிறது. அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.

Angelo Mathews

இந்த போட்டியில் விளையாடி வரும் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு இது நூறாவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகமான மேத்யூஸ் 99 ஆட்டங்களில் விளையாடி 6,876 ரன்கள் குவித்திருந்தார்.

- Advertisement -

இன்றைய நூறாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற மேத்யூஸ் 106 பந்துகளை சந்தித்து 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இப்படி 100-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவருக்கு போட்டி தொடங்கும் முன்னர் அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் ஒரு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. அந்த வகையில் மேத்யூஸ்க்கு நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான சிறப்பு தொப்பியை அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் வழங்கி கவுரவித்தது.

இதையும் படிங்க : IND vs WI : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் – புது வீரருக்கு அறிமுக வாய்ப்பு

அதோடு இலங்கை அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவர்கள் பட்டியலில் ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், சமீந்தா வாஸ் மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோரை தொடர்ந்து ஆறாவது ஜாம்பவானாக மேத்யூஸ் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement