IND vs WI : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் – புது வீரருக்கு அறிமுக வாய்ப்பு

INDvsWI-Toss
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் ஜூலை 22-ஆம் தேதி இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Shardul-Thakur

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி அதே குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் சற்று முன்னர் துவங்கியது. இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதே வேளையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியுள்ளது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியானது இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட பின்னர் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தற்போது பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

Avesh Khan

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அணியில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டும் இந்திய அணியின் கேப்டன் தவான் செய்துள்ளார். அதன்படி கடந்த போட்டியில் பந்துவீச்சில் சொதப்பிய பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக தற்போது இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் இந்திய ஒருநாள் அணிக்காக அறிமுகமாகியுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிய ஆவேஷ் கான் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்திய அணியில் இவரோட இடம் இப்போ ரொம்ப டேஞ்சரான பொசிஷன்ல இருக்கு – அகார்கர் ஓபன்டாக்

1) ஷிகார் தவான், 2) சுப்மன் கில், 3) ஷ்ரேயாஸ் ஐயர், 4) சூரியகுமார் யாதவ், 5) சஞ்சு சாம்சன், 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) யுஸ்வேந்திர சாஹல், 11) ஆவேஷ் கான்

Advertisement