லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் நியமிக்கப்பட இதுவே காரணம் – சஞ்ஜீவ் கோயங்கா அதிரடி

Goenka
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் 15-வது ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக 8 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள வேளையில் தற்போது அடுத்த ஐபிஎல் தொடரில் புதிதாக இணைய இருக்கும் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் தங்களது அணியில் தேர்வு செய்யப்பட இருக்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவரையும் தேர்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில் அந்த புதிய லக்னோ அணியின் ஆலோசகராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

- Advertisement -

அதன்படி லக்னோ அணியின் ஆலோசகராக கம்பீர் நியமிக்கப்பட்ட பின்னர் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கம்பீர் ஆலோசகராக நியமித்ததன் காரணம் என்ன என்பது குறித்து அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கௌதம் கம்பீர் எங்கள் அணியின் மோட்டிவேட்டராக பணியாற்றுவார். அதோடு அவர் லக்னோ அணியை நீண்டகாலத்திற்கு விளையாடும் அணியாக மாற்று ஒரு நபராக அவர் செயல்படுவார்.

ஏனெனில் அவரின் தலைமையின் கீழ் பல இளம் வீரர்களை அவர் உருவாக்கி கொல்கத்தா அணிக்காக தந்துள்ளார். அதனைப் போன்று தற்போது லக்னோ அணிக்காகவும் பல இளம் வீரர்களை கண்டெடுத்து சிறப்பாக செயல்படும் அணியாக மாற்றும் வேலையை மேற்கொள்ள இருக்கிறார் இதுவே அவருடைய முக்கிய பணி என்று அணியின் உரிமையாளர் கூறியுள்ளார். புதிய பயிற்சியாளரான ஆன்டி பிளவருடன் இணைந்து செயல்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 2022 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை இந்திய அணியை அறிவித்த பி.சி.சி.ஐ – முழுலிஸ்ட் இதோ

அதேபோன்று லக்னோ அணி மெகா ஏலத்திற்கு முன்பாக மூன்று முக்கிய வீரர்களாக கே.எல் ராகுல், இஷான் கிஷன், ரஷீத் கான் ஆகியோரை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதுகுறித்த பேச்சுக்களும் அவ்வப்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement