2022 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை இந்திய அணியை அறிவித்த பி.சி.சி.ஐ – முழுலிஸ்ட் இதோ

u-19
- Advertisement -

நான்கு முறை உலக கோப்பை சாம்பியனான இந்திய அணியானது தற்போது 2022ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை அணியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 14-ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான 17 வீரர்கள் அடங்கிய இந்திய அணியை தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமன பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளது.

14-வது ஐசிசி தொடராக நடைபெற இருக்கும் இந்த அண்டர் 19 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக டெல்லி பேட்ஸ்மென் யாஷ் துல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து துணை கேப்டனாக எஸ்.கே ரஷீத் நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 17 பேர் கொண்ட வீரர்களின் பெயரை பதிவிட்டு சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள் என்றும் அந்த பதிவினை பகிர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய அணி 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் அண்டர் 19 உலக கோப்பையை வென்றுள்ளது.

அதோடு 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடர்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2022 அண்டர் 19 உலக கோப்பை தொடருக்கான இந்திய வீரர்களின் முழு லிஸ்ட் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : அவர் ஒரு எக்சலன்ட்டான பேட்ஸ்மேன். ஆனா நல்ல கேப்டன் கிடையாது – இயான் சேப்பல் ஓபன்டாக்

1) யாஷ் துல் (கேப்டன்), 2) ஹர்நூர் சிங், 3) அன்ங்க்ரிஷ் ரகுவன்ஷி, 4) எஸ்.கே ரஷீத் (து.கேப்டன்), 5) நிஷாந்த் சிந்து, 6)சித்தார்த் யாதவ், 7) அனீஸ்வர் கவுதம், 8) தினேஷ் பானா (வி.கீப்பர்), 9) ஆராத்யா யாதவ் (வி.கீப்பர்), 10) ராஜ் அங்கட் பாவா, 11) மானவ் பராக், 12) கவுஷல் தாம்பே, 13) ஆர்.எஸ் ஹங்கரேக்கர், 14) வாசு வாட்ஸ், 15) விக்கி ஆஸ்ட்வால், 16) ரவி குமார், 17) கார்வ் சங்வான்.

Advertisement