ராகுல் தலைமையிலான லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு! என்ன பெயர் தெரியுமா?

Sanjiv
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 நகரங்களை மையமாகக் கொண்ட புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து இந்த 2 அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் இந்த முறை மெகா ஏலம் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த ஏலத்திற்கு முன்பாக ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தேர்வு செய்து கொண்டுள்ளன.

ipl

- Advertisement -

லக்னோ அணி:
ஆர்பி சஞ்சீவ் கோயங்கா நிறுவனம் சார்பில் ரூபாய் 7090 கோடிகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள லக்னோ அணி நிர்வாகம் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல், இளம் வீரர் ரவி பிஷ்னோய் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோனிஸ் ஆகிய 3 வீரர்களை அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. அதேபோல் லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய பெயர் :
கடந்த சில மாதங்களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட இந்த அணியின் முழு பெயர் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தங்கள் அணியின் புதிய பெயரை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி அந்த அணிக்கு “லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

lucknow

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தடைபெற்ற போது இவர் “ரைசிங் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ்” என்ற பெயரில் ஐபிஎல் அணியை வாங்கி இருந்தார். தற்போது அந்த அணியின் பெயரைப் போலவே லக்னோ அணிக்கும் பெயரிடப்பட்டுள்ளது.

- Advertisement -

ரசிகர்கள் வைத்த பெயர் :
முன்னதாக தங்கள் அணிக்கு தகுந்த புதிய பெயரை பரிந்துரைக்குமாறு அந்த அணி நிர்வாகம் ஏற்கனவே கடந்த மாதம் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தது. அதைத்தொடர்ந்து பல ரசிகர்களும் அந்த அணியின் இணைய பக்கத்தில் தங்கள் மனதில் பட்ட பெயர்களை பரிந்துரைத்தார்கள்.

இதையும் படிங்க : கோலியின் சக்சஸை பலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவரை ராஜினாமா செய்ய வெச்சுட்டாங்க – ரவி சாஸ்திரி

அதில் மிகச்சிறந்த பெயரை அந்த அணி நிர்வாகம் தற்போது தேர்வு செய்து வெளியிட்டுள்ளது. இதுபற்றி அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா,”எங்கள் அணியின் பெயரை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்தினோம். அதற்கு ஏராளமான பதில்கள் வந்தன. அதில் அதிகப்படியான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் என்ற பெயரைப் பரிந்துரைத்தார்கள்” என கூறியுள்ளார்.

Advertisement