கோலியின் சக்சஸை பலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவரை ராஜினாமா செய்ய வெச்சுட்டாங்க – ரவி சாஸ்திரி

Shastri
- Advertisement -

நடைபெற்று முடிந்துள்ள தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்துடன் இந்தியாவின் ஒட்டுமொத்த கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியுள்ளார். கடந்த 2017 முதல் 3 வகையான இந்திய கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவரால் இந்தியாவிற்காக ஒரு உலக கோப்பையை கூட வென்று தர முடியவில்லை. இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்த அவர் அதற்கு முடிவுகட்டும் வண்ணம் கடந்த 2021 டி20 உலகக்கோப்பையுடன் முதலில் டி20 கேப்டன் பதவியில் இருந்து மட்டும் விலகினார்.

kohli

- Advertisement -

வெற்றிகரமான கேப்டன்:
ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர்ந்து செயல்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்திய பிசிசிஐ ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக நீக்கியது.

அதனால் மனமுடைந்த அவர் 68 போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்று இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்த போதிலும் அந்த பதவியை திடீரென ராஜினாமா செய்து தற்போது இந்திய அணியில் ஒரு சாதாரண வீரராக விளையாடி வருகிறார்.

ஜீரணிக்க முடியல:
இந்நிலையில் டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி இன்னும் 2 வருடங்கள் செயல்பட்டு இருப்பார். ஆனால் அவரின் வெற்றியை பலரால் ஜீரணிக்க முடியவில்லை என முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி இன்று அவர் அளித்துள்ள ஒரு செய்திக்குறிப்பில், “அடுத்த 2 வருடங்களுக்கு டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டிருப்பார். ஏனெனில் இந்த காலகட்டங்களில் தரவரிசையில் 9, 10 ஆகிய இடங்களில் உள்ள சிறிய அணிகளுடன் சொந்த மண்ணில் இந்தியா விளையாட உள்ளது. அப்படி நடக்கும் அந்த போட்டிகளில் நிச்சயம் இந்தியா வெற்றி பெறும் என்பதால் விராட் கோலி கேப்டனாக 50 – 60 வெற்றிகளை பதிவு செய்து உலக சாதனை படைத்திருப்பார். இருப்பினும் அதை பலரால் ஜீரணிக்க முடியவில்லை”

kohli

என தெரிவித்துள்ள அவர் விராட் கோலியின் வெற்றிகளை பலரால் ஜீரணிக்க முடியவில்லை என மறைமுகமாக பிசிசிஐயை குற்றம் சாட்டினார். அவர் கூறுவது போல விராட் கோலி இன்னும் 2 வருடங்கள் இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு இருந்தால் குறைந்தபட்சம் 15 வெற்றிகளைப் பெற்றிருக்க முடியும்.

- Advertisement -

உலகசாதனை:
அப்படி அவர் தலைமையில் இந்தியா குறைந்தது இன்னும் 15 வெற்றிகளை பெற்றிருந்தால் “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன் என்ற உலக சாதனையை விராட் கோலி” படைத்திருப்பார். ஏனெனில் தற்போது 40 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ள அவர் முதலிடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்தை (53 வெற்றிகள்) முந்த பிரகாசமான வாய்ப்பு இருந்தது.

kohli

கடந்த 2014ஆம் ஆண்டு 7வது இடத்தில் தத்தளித்த இந்தியாவை 2016 முதல் 2021 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக விராட் கோலி வெற்றிநடை போட செய்தார். வெளிநாடுகளில் அவர் தலைமையில் பல சரித்திர வெற்றிகளை பெற்ற இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. எனவே ரவி சாஸ்திரி கூறுவது போல இன்னும் 2 வருடங்கள் அவர் கேப்டனாக செயல்பட்டிருந்தால் நிச்சயம் உலக சாதனை படைத்திருப்பார்.

- Advertisement -

பேட்டிங்கில் கவனம்:
“அவர் தலைமையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வென்ற இந்தியா தென்ஆப்பிரிக்காவில் 2 – 1 என தோற்றது. ஆனாலும் இன்னும் கூட விராட் கோலி கேப்டனாக செயல்பட தகுதியானவரா என சிலர் பேசுகிறார்கள். ஆனால் வெளிநாடுகளில் இதுபோன்ற சாதனைகளை பெரிதாக பார்ப்பார்கள். சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி போன்றவர்கள் கேப்டன்ஷிப் செய்ய விரும்பாத போது விலகினார்கள்.

அதே முடிவுதான் விராட் கோலியும் எடுத்துள்ளார். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்றவர்கள் தங்களது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன்சிப்பை விட்டுக்கொடுத்தனர். அதுபோலவே விராட் கோலியும் இனி தனது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளார்”

இதையும் படிங்க : கேப்டன் கோலியிடம் இருந்த ஒரு விடயம் ராகுலிடம் சுத்தமா இல்ல் – விளாசிய முன்னாள் வீரர்

என விராட் கோலி மற்றும் அவரின் கேப்டன்ஷிப் பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலளித்த ரவி சாஸ்திரி கேப்டன் பதவியில் இருந்து விலகியது அவரின் சொந்த முடிவு என தெரிவித்தார். மேலும் இனி எந்த வித விமர்சனங்களும் இல்லாமல் தனது பேட்டியில் அவர் கவனம் செலுத்துவார் எனவும் கூறியுள்ளார்.

Advertisement