கேப்டன் கோலியிடம் இருந்த ஒரு விடயம் ராகுலிடம் சுத்தமா இல்ல் – விளாசிய முன்னாள் வீரர்

Rahul
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா விளையாடி வந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோற்ற இந்தியா ஒயிட்வாஷ் தோல்வி அடைந்து அவமானத்தை சந்தித்துள்ளது. முன்னதாக முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 1 என இழந்த இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணி என்ற அந்தஸ்தை நழுவ விட்டது. இருப்பினும் கே.எல் ராகுல் தலைமையில் ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று அந்த தோல்விக்கு தென்னாப்பிரிக்காவை இந்தியா பழி தீர்க்கும் என பல ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Rahul

- Advertisement -

மோசமான கேப்டன்ஷிப்:
ஆனால் டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் மண்ணை கவ்வி பரிதாப தோல்வி அடைந்துள்ளது. ஒருநாள் தொடரில் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியன இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது. அதையும் தாண்டி முதல் முறையாக இந்தியாவிற்கு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுலின் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் இந்தியாவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

குறிப்பாக 6வது பந்து வீச்சாளராக வெங்கடேஷ் ஐயரை பயன்படுத்த தவறிய அவர் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா போல சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 பந்து வீச்சுகளையும் கலந்து பயன்படுத்தாமல் தனித்தனியாக பயன்படுத்தினார்.

Rahul-1

ஸ்பார்க் இல்லை:
இதற்கு முன் விராட் கோலி தலைமையில் உலகக்கோப்பையை வெல்ல விட்டாலும் கூட இது போன்ற சாதாரண தொடர்களில் எதிரணிகளை இந்தியா பந்தாடியது. பொதுவாகவே ஆக்ரோசமாக கேப்டன்ஷிப் செய்யும் விராட் கோலி தலைமையில் இந்திய அணியில் இருந்த ஸ்பார்க் தற்போதைய அணியில் இல்லை என முன்னாள் தேர்வுகுழு உறுப்பினர் சரந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், கூறியதாவது : “தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடர் மட்டுமல்லாது ஒருநாள் தொடரிலும் முதல் நாளிலிருந்தே இந்தியா வெற்றி பெறும் அணியாக இருந்தது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்றபின் 2வது டெஸ்டில் படுமோசமாக தோல்வியடைந்தது. இந்தியாவின் தோல்விக்கு வீரர்கள் மட்டும் காரணமல்ல, மோசமான கேப்டன்ஷிப் ஒரு காரணமாகும். கேஎல் ராகுல் எப்போதும் பொறுமையாக அமைதியாக இருக்கும் ஒரு கேப்டனாக தென்படுகிறார்.

rahul 2

ஆனால் விராட் கோலியை நீங்கள் பார்த்தால் மிகவும் ஆக்ரோசமாக எனர்ஜியாக கேப்டன்ஷிப் செய்யக்கூடியவர். கேப்டனை போலவே அவரைப் பார்த்து அணியில் உள்ள வீரர்களும் வெற்றிக்காக அதிரடியாக விளையாடினார்கள். ஆனால் வெளியிலிருந்து இப்போது இந்திய அணியை பார்க்கும் போது பழைய அணியில் இருந்த ஸ்பார்க் இல்லை என தோன்றுகிறது. இப்போது உள்ள அணியில் எனர்ஜி மற்றும் ஸ்பார்க் இல்லை” என கூறியுள்ளார்.

- Advertisement -

விராட் கோலி போல கேஎல் ராகுல் ஒரு அதிரடியான கேப்டனாக இல்லாமல் அமைதியான கேப்டனாக இருப்பது இந்திய அணியில் விளையாடும் வீரர்களிடையே உத்வேகத்தை அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இனி இவருக்கு டீம்ல அதிக சேன்ஸ் குடுக்கப்போறோம். இவர் ஒரு செம பிளேயர் – இளம்வீரரை பாராட்டிய டிராவிட்

ரவி சாஸ்திரி – விராட் கோலி:
“ரவி சாஸ்திரியும் விராட் கோலியும் இந்திய அணியில் அதிரடியை புகுத்தினார்கள். அவர்கள் தலைமையில் கடந்த 7 வருடங்களாக இந்தியா அபாரமாக செயல்பட்டது. மாடர்ன் கிரிக்கெட்டுக்கு அவர்கள் போல ஆக்ரோஷமான குணம் தேவை. இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா ஆக்ரோசமாக விளையாடியது”என இது பற்றி மேலும் தெரிவித்த சரந்தீப் சிங் கடந்த 7 வருடங்களாக ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி தலைமையில் இந்தியா அதிரடியான கிரிக்கெட்டை விளையாட கற்றுக்கொண்டதாக பாராட்டியுள்ளார்.

Advertisement