இனி இவருக்கு டீம்ல அதிக சேன்ஸ் குடுக்கப்போறோம். இவர் ஒரு செம பிளேயர் – இளம்வீரரை பாராட்டிய டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் ராகுலின் கேப்டன் சி பெரிதாக சோபிக்கவில்லை. மூன்று ஆட்டத்திலிமே வீரர்களின் தேர்வில் அவர் தவறு செய்துள்ளார் என்று பெரிதளவு விமர்சனம் அவர் மீது எழுந்துள்ளது.

Rahul

- Advertisement -

அதன்படி நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் துவக்கத்திலேயே ராகுல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் தவான், விராட் கோலி மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார்கள். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் ஏழாவது வீரராக களமிறங்கி அதிரடியான அரை சதத்தை அடித்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறிய அவர் போட்டி முடியும் வரை வெற்றிக்காக காத்திருந்தார். ஆனால் இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த போது அவர் கண் கலங்கியது ரசிகர்களையும் நெகிழ வைத்தது. இந்நிலையில் இனிவரும் போட்டிகளில் தீபக் சாகருக்கு தொடர்ச்சியாக இந்திய அணியில் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

deepak

இதுகுறித்து அவர் கூறுகையில் : தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தீபக் சாகர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இலங்கை அணிக்கெதிரான தொடரின் போதும் பேட்டிங்கில் தனது திறனை வெளிப்படுத்திய அவர் தற்போது இந்த போட்டியிலும் மீண்டும் தன்னிடமுள்ள பேட்டிங் திறமையை வெளிக்காட்டியுள்ளார். இந்திய ஏ அணியில் அவர் விளையாடும் போதிலிருந்தே அவரை நான் பார்த்துகிறேன்.

- Advertisement -

அவரிடம் நிச்சயமாக பவுலிங் மட்டுமின்றி கூடுதலாக பேட்டிங் ஆப்ஷனும் உள்ளது. அதை தான் இந்த போட்டியிலும் பார்த்தோம் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சாகர் ஆகியோர் பேட்டிங்கிலும் கை கொடுப்பது ஒரு நல்ல விடயம் தான். எனவே இதுபோன்ற வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் நாம் வாய்ப்பு கொடுத்தாக வேண்டும். ஏனெனில் அவர்களால் பின்வரிசையில் களமிறங்கி அணிக்கு உதவ முடியும். எனவே நிச்சயம் இனிவரும் போட்டிகளில் அவர்கள் இருவருக்குமே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினார்.

இதையும் படிங்க : வீடியோ : மைதானத்திலேயே ரிஷப் பண்ட் செய்த செயலால் கடுப்பான விராட் கோலி – நடந்தது என்ன?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கணக்கில்கொண்டு இனிவரும் ஒருநாள் போட்டிகளில் வீரர்கள் அனைவரும் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை அப்படியே ஊக்குவித்து நல்ல அணியை கொண்டு வருவோம் என்றும் டிராவிட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement