- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2012 மாதிரி அந்த 3 தோல்விக்கு காரணமான ரோஹித், கோலி போகட்டும் விடுங்க.. புதிய இந்தியாவை வாழ்த்திய மஞ்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க அவர்களுடைய சுமாரான ஆட்டம் முக்கிய காரணமானது. அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர்கள் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா 12 வருடங்கள் கழித்து வெற்றி பெற உதவினார்கள்.

அதனால் அடுத்ததாக ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்காக புதிய அணியை உருவாக்க விரும்பும் பிசிசிஐ அவர்களை கழற்றி விட முடிவெடுத்தது. அதற்கு முன்பாகவே அவர்கள் ஓய்வு பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

கவலை வேண்டாம்:

எப்படியிருந்தாலும் இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றிய விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது பெரும்பாலான ரசிகர்களை சோகமடைய வைத்தது. இந்நிலையில் கடந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியா தோல்வியை சந்திக்க விராட் கோலி, ரோஹித் சர்மா முக்கிய காரணமானதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். அதே காரணத்தால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக இந்தியா தகுதி பெறாமல் வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அந்த 3 தோல்விக்கும் காரணமான அவர்கள் போகட்டும் புதிய இந்திய அணியை வாழ்த்துவோம் என்று சஞ்சய் மஞ்ரேக்கர் பதிவிட்டுள்ளார். இது பற்றி அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “சில ரசிகர்கள் கவலையுடன் இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு காலத்தில் கங்குலி, சச்சின், டிராவிட் உள்ளிட்ட டாப் இந்திய 4 ஜாம்பவான் வீரர்கள் ஒன்றாக ஓய்வு பெற்ற போது பதற்றமான சூழ்நிலை நிலவியது”

- Advertisement -

மஞ்ரேக்கர் கருத்து:

“ஆனால் அப்போது என்ன நடந்தது தெரியுமா? அடுத்த சில வருடங்களில் இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறியது. இந்தியாவில் நாட்டுக்காக விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுக்கும் ஆர்வம் கொண்ட இளம் வீரர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக நான் நம்புகிறேன். அப்படியானால் யார் வேண்டுமானாலும் வந்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்க முடியும்”

இதையும் படிங்க: ஆண்டர்சனையே ஆட்டிப்பார்த்த கோலி.. இந்தியாவின் 2021 கனவை நிஜமாக்கும் முன் கழற்றி விட்டிங்களே.. மைக்கேல் வாகன்

“ஆம் அதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் பதற்றமடைய வேண்டாம். 2013இல் ஜாம்பவான்கள் விடைபெற்ற போது நம்முடைய பவுலிங் துறை முன்னேறியது. அதே போல இப்போதும் புதிய நட்சத்திரங்கள் வருவார்கள். இந்தியா தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக இருக்கும். வெளிநாடுகளில் பேட்டிங் முக்கியம். அதுவே தற்சமயத்தில் நமது அணியில் பிரச்சினையாக இருக்கிறது. கோலி, ரோஹித் அங்கமாக இருந்த இந்திய அணி தான் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோசமாக தோற்றது. எனவே தற்போதையய இந்திய அணி தோற்க எதுவுமில்லை. புதிய இந்தியாவுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -