ரன்ஸ் அடிக்கலன்னு கழற்றி விட்றாதீங்க.. அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் 100% விளையாடனும்.. சஞ்சய் மஞ்ரேக்கர் கோரிக்கை

Sanjay Manjrekar
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் மாதம் கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் விளையாடும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ள இளம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.

குறிப்பாக சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டரில் சிவம் துபே சிக்சர்களை பறக்க விட்டு அபாரமாக விளையாடி வருகிறார். எனவே அவர் கண்டிப்பாக உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்கள் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டுள்ளனர். அதே போல ரியன் பராக், சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களும் சிறப்பாக செயல்படுவதால் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்காக மறந்துடாதீங்க:
இருப்பினும் உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் 2024 ஐபிஎல் தொடரில் பெரிய ரன்கள் அடிக்கவில்லை. குறிப்பாக கடந்த வருடம் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து 14 போட்டிகளில் 474 ரன்கள் குவித்ததால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ரிங்கு சிங் இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றினார்.

ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சுனில் நரேன் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து வருகின்றனர். அதனால் பெரியளவில் வாய்ப்பு பெறாத ரிங்கு சிங் 6 போட்டியில் 83 ரன்களை மட்டுமே 162.75 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். இந்நிலையில் பெரிய ரன்கள் எடுக்கவில்லை என்பதற்காக ரிங்கு சிங்கை உலகக் கோப்பையில் தேர்வு செய்ய மறந்து விடக்கூடாது என சஞ்சய் மஞ்ரேக்கர் தேர்வுக்குழுவை கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவருக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே ரிங்கு சிங்கை தேர்வுக் குழுவினர் மறந்து விட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் நேரடியாக இந்திய அணிக்குள் வருவதற்கு தகுதியானவர். ஏனெனில் தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் அவர் எந்தளவுக்கு தொடர்ந்து நன்றாக விளையாடினார் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்”

இதையும் படிங்க: ரோஹித் சொல்றது சரி தான்.. இதனால் சிவம் துபே மாதிரி ப்ளேயர்ஸ் வளர மாட்டாங்க.. ஜஹீர் கான் அதிருப்தி

“இந்திய அணியில் எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் அவர் முக்கிய வீரராக இருப்பதை நான் விரும்புகிறேன். அதே போல நீண்ட காலமாக தடுமாறிய சஞ்சு சாம்சன் ஒரு வழியாக நம்முடைய எதிர்பார்ப்புக்கு நிகரான செயல்பாடுகளை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளார். நல்ல முதிர்ச்சியுடன் தொடர்ந்து அசத்தும் அவரைப் போன்ற நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர் இந்திய டி20 அணிக்கு அவசியம்” என்று கூறினார்.

Advertisement