ரோஹித் சொல்றது சரி தான்.. இதனால் சிவம் துபே மாதிரி ப்ளேயர்ஸ் வளர மாட்டாங்க.. ஜஹீர் கான் அதிருப்தி

Zaheer Khan 2
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடர் கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது. அதில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து 10 அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. அந்த தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட அணிகள் புள்ளிப்பட்டியலில் மேல் வரிசையில் அசத்தி வருகின்றன. மறுபுறம் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட அணிகள் கீழ் வரிசையில் தடுமாறி வருகின்றன.

முன்னதாக 2008இல் சாதாரணமாக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 16 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை கடந்து இன்று சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நம்பர் ஒன் தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளதை அறிவோம். அதில் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப நிறைய மாற்றங்களும் புதிய விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.

- Advertisement -

ஜஹீர் கானும் எதிர்ப்பு:
அந்த வகையில் இம்பேக்ட் வீரர் எனும் விதிமுறையை கடந்த வருடம் பிசிசிஐ அறிமுகப்படுத்தியது. அதன் படி ஒரு இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு வீரரை சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறையை பயன்படுத்தி தற்போது ஒவ்வொரு அணிகளும் 12 வீரர்களுடன் விளையாடுவதை வாடிக்கையாக வைத்துள்ளன.

ஆனால் தமக்கு இந்த விதிமுறை பிடிக்கவில்லை என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த விதிமுறை ஆல் ரவுண்டர்களுக்கு நல்லதல்ல. அதனால் வாஷிங்டன் சுந்தர், சிவம் துபே போன்றவர்கள் இந்த சீசனில் பந்து வீசவில்லை. இது கவலைக்குரிய அம்சமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் நீங்கள் 11 வீரர்களுடன் மட்டும் விளையாடுகிறீர்கள்”

- Advertisement -

“ஆனால் ஐபிஎல் தொடரில் 12 வீரர்களுடன் போட்டியிடுகிறீர்கள். இது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட விதிமுறையாகும். ஆனால் இந்த இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு நான் சாதகமாக இல்லை” என்று கூறினார். இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்தக் கருத்தை முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ஜாகீர் கான் வரவேற்றுள்ளார்.

இதையும் படிங்க: என்னதான் நெனச்சிட்டு அவரை டீம்ல சேத்தீங்க.. ஹார்டிக் பாண்டியாவின் முடிவை – விளாசும் ரசிகர்கள் (நடந்தது என்ன?)

மேலும் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் முழுமையாக வளரும் வாய்ப்பு குறைவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்தக் கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். இதில் கொஞ்சம் கவலையளிக்கும் விஷயம் இருக்கிறது. எனவே அதை சமாளிப்பதற்கான வழியை நாம் கண்டறிய வேண்டும். இம்பேக்ட் விதிமுறையால் உங்களுக்கு பாதி ஆல் ரண்டர்கள் தான் கிடைப்பார்கள். முழுமையான ஆல் ரவுண்டர்கள் கிடைக்க மாட்டார்கள்” என்று கூறினார்.

Advertisement