என்னதான் நெனச்சிட்டு அவரை டீம்ல சேத்தீங்க.. ஹார்டிக் பாண்டியாவின் முடிவை – விளாசும் ரசிகர்கள் (நடந்தது என்ன?)

Pandya-Nabi
- Advertisement -

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 18-ஆம் தேதி நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பெற்றிருந்தது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 78 ரன்களையும், ரோஹித் சர்மா 36 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக மும்பை அணி 9 ரன்கள் வெற்றியை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா செய்த தவறு ஒன்றினை சுட்டிக்காட்டி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக இடம்பெற்றுள்ள முகமது நபி பேட்டிங்கில் அதிரடியாக விளையாடக் கூடியவர்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி அவர் ஒரு மிகச்சிறந்த ஆப் ஸ்பின்னராக இருக்கும் அவரை அணியில் தேர்வு செய்த பாண்டியா நேற்றைய போட்டியில் அவருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கவில்லை. மேலும் பேட்டிங்கிலும் அவர் கடைசியாக ஒரே பந்தை மட்டுமே பிடித்ததால் இப்படி ஒரு தரம் வாய்ந்த வீரரை அணியில் எடுத்து விளையாட வைக்காமல் வீணடிப்பது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க : பாண்டியாவை மதிக்காத இளம் வீரர்.. தண்டனை நேரத்தில் பொறுப்பேற்று முடித்த ரோஹித் சர்மா.. நடந்தது என்ன?

ரசிகர்களின் கருத்தின் படியே நேற்றைய போட்டியில் பேட்டிங்கில் கடைசி பந்தை மட்டுமே எதிர்கொண்ட நபி அதன் பிறகு பந்துவீச வரவே இல்லை. இருந்தாலும் பீல்டிங்கில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய நபி வெற்றிக்கு முக்கியமான நேரத்தில் அஷுதோஷ் சர்மா மற்றும் பிரார் ஆகியோரது கேட்சை பிடித்து பீல்டிங்கில் அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement