2023 உ.கோ தொடரில் அஸ்வின மட்டும் எடுத்துறாதீங்க, அந்த 2 ஸ்பின்னர்கள் தான் பெஸ்ட் – சஞ்சய் மஞ்ரேக்கர் கூறும் காரணம் என்ன

Sanjay
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதில் பொதுவாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக செயல்படும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்துமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. பொதுவாக இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களின் தாக்கம் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அந்த சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடுவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

- Advertisement -

எனவே முதன்மை ஸ்பின்னராக விளையாடப் போவது யார் என்பதே கேள்வியாக இருக்கிறது. இருப்பினும் அந்த இடத்திற்கு குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வென்ற சாஹல் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக ஆரம்ப காலங்களில் முதன்மை ஸ்பின்னராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வினை 2017 சாம்பியன்ஸ் டிராபியுடன் கழற்றி விட்ட விராட் கோலி இந்த இருவரையும் புதிய சுழல் பந்து வீச்சு ஜோடியாக உருவாக்கினார்.

அஸ்வின் வேண்டாம்:
அதில் தோனி விக்கெட் கீப்பராக இருந்து உதவி புரிந்ததால் 2019 உலகக் கோப்பையில் சிறப்பாகவே செயல்பட்ட அந்த ஜோடி அவர் ஓய்வு பெற்றதும் தடுமாறி 2021 டி20 உலக கோப்பையில் தேர்வாகவில்லை. அதனால் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்த அஸ்வின் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தி கடந்த 2022 டி20 உலக கோப்பையிலும் விளையாடினார். ஆனால் குறைந்த ரன்களை கொடுத்து கட்டுக்கோப்புடன் பந்து வீசும் அவர் தேவைப்படும் சமயத்தில் விக்கெட்களை எடுப்பதில் தடுமாறினார். அதனால் மீண்டும் கழற்றி விடப்பட்ட அவருக்கு பதிலாக சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பிய சாஹல் – குல்தீப் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

chahal

இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கக்கூடாது என சஞ்சய் மஞ்ரேக்கர் கேட்டுக் கொண்டுள்ளார். அதே சமயம் சஹாலை விட ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த ஒரே இந்திய பவுலராக சாதனை படைத்துள்ள குல்தீப் யாதவ் விளையாட வேண்டுமெனக் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அஸ்வின் பந்து வீச்சில் உங்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தால் அவரை சேர்க்கலாம். ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அவர் அதை செய்வதில்லை என்பதை நாம் நன்றாக பார்த்து விட்டோம்”

- Advertisement -

“சமீப காலங்களில் நல்ல முன்னேற்றத்தை கண்டாலும் அவர் சஹால் போல உங்களுக்கு அனைத்து நேரங்களிலும் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பதில்லை. அதே சமயம் எதிரணியின் பேட்டிங் ஆர்டரை பொறுத்து தான் 2 மணிக்கட்டு ஸ்பின்னர்கள் விளையாடுவதை தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக மணிக்கட்டு ஸ்பின்னர்களை எதிர்கொள்ள எதிரணி தடுமாறினால் நீங்கள் சஹால் மற்றும் குல்தீப் ஆகிய இருவரையும் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் 50 ஓவர் கிரிக்கெட்டில் சஹாலை விட குல்தீப்பை நான் சிறந்த மணிக்கட்டு ஸ்பின்னராக தேர்வு செய்வேன்”

Sanjay

“ஏனெனில் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் அடிக்கும் போது விக்கெட் எடுப்பவரை விட பந்தை தள்ளி தடுப்பாட்டம் விளையாட முயற்சிக்கும் போது விக்கெட் எடுக்கும் ஸ்பின்னரே உங்களுக்கு தேவை. டி20 கிரிக்கெட்டில் அப்படி தான் ஸ்பின்னர்கள் விக்கெட்டுகள் எடுப்பதை நீங்கள் அதை அடிக்கடி பார்க்கலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் பெரும்பாலும் அதிரடியாக அடிப்பதை விட பந்தை தள்ளுவதற்கே முயற்சிப்பார்கள்”

இதையும் படிங்க:வீடியோ : மூளையில்லாத பேட்டிங் பண்ணி மானத்தை வாங்குறிங்களே- இங்கிலாந்து அணியால் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏமாற்றம்

“எனவே அது போன்ற சமயங்களில் விக்கெட்டுகளை எடுக்கும் குல்தீப் யாதவ் தான் என்னுடைய விளையாடும் 11 பேர் அணியில் முதன்மைப் ஸ்பின்னராக இருப்பார். மேலும் இந்த உலகக் கோப்பையில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுத்து டெத் ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பைக் கொடுக்கும் ஸ்பின்னர்கள் தேவை. குறிப்பாக பும்ரா இல்லாத நிலைமையில் பெரிய மைதானங்களில் சஹால் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுப்பார். ஆனால் பிளாட்டான பிட்ச் இருக்கும் சிறிய மைதானங்களில் அந்த இருவரையும் விளையாடுவது ஆபத்தானது” என்று கூறினார்.

Advertisement