மூளையில்லாத பேட்டிங் பண்ணி மானத்தை வாங்குறிங்களே- இங்கிலாந்து அணியால் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏமாற்றம்

ENG Batting
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்தங்கியது. குறிப்பாக முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 393/8 ரன்கள் எடுத்து ஜோ ரூட் 118* ரன்களுடன் களத்தில் இருந்ததால் வெற்றியை தீர்மானித்த எக்ஸ்ட்ரா 40 – 50 ரன்களை எடுக்கும் வாய்ப்பை தைரியமாக டிக்ளர் செய்கிறோம் என்ற பெயரில் கோட்டை விட்டது இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது.

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 என்ற அதிரடியான ஆட்டத்தை மூட்டை கட்டி விட்டு வழக்கம் போல விளையாடி கௌரவமான ஆஷஸ் கோப்பையை வென்று மானத்தை காப்பாற்றுமாறு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் கேப்டன்கள் விமர்சித்தனர். ஆனால் ஒரு தோல்விக்காக பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்த பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் இந்த தொடர் முழுவதும் இதே அதிரடி அணுகுமுறையுடன் விளையாட போவதாக தெரிவித்தார். மறுபுறம் இங்கிலாந்தின் இந்த குருட்டுத்தனமான போலியான தன்னம்பிக்கையை பயன்படுத்தி வெற்றி கண்ட ஆஸ்திரேலியா ஜூன் 28ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 416 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

ஜாம்பவான் வேதனை:
அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஓலி ராபின்சன் மற்றும் ஜோஸ் டாங் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து 325 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பென் டூக்கெட் 98 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்களை சாய்த்தார். அதன் பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 130/2 ரன்கள் எடுத்து 221 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்த போட்டியிலும் மழை வராமல் போனால் இங்கிலாந்து தோற்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் ஜாக் கிராவ்லி 48, டூக்கெட் 98, ஓலி போப் 42 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்ததால் 188/1 என்ற நல்ல ஸ்கோருடன் இங்கிலாந்து வலுவான துவக்கத்தை பெற்றது. அதனால் 400 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் வலையில் கடைசி 7 விக்கெட்டுக்கு வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. குறிப்பாக ஃபீல்டர்கள் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் பந்துகளை ஸ்டைலுக்காக அடித்த ஜாக் கிராவ்லி, ஜோ ரூட், ஹரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தங்களுடைய விக்கெட்டை வேண்டுமென்றே பரிசளிக்கும் வகையில் அவுட்டானார்கள்.

- Advertisement -

அதனால் ஏமாற்றமடைந்த முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ரசிகர்களைப் பொழுது போக்குகிறோம் என்ற பெயரில் முட்டாள்தனமாக விளையாடாதீர்கள் என்று வெளிப்படையாக விமர்சித்தார். அந்த நிலையில் இப்போட்டியை நேரடியாக பார்த்த முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் ஜெஃப்ரி பாய்காட் வேண்டுமென்றே தனது விக்கெட்டை பரிசளிக்கும் வகையில் ஹரி ப்ரூக் அவுட்டான போது தமது முகத்தில் கை வைத்து “இந்த கொடுமையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளதே” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது.

அதை ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்த நிலையில் அதற்கு “ஆம் இது மூளை இல்லாமல் பேட்டிங் செய்வது போல் இருக்கிறது. அதை பற்றி என்னுடைய கேப்டன் மைக் பியர்ரர்லீயுடன் பேசினேன்” என பதிலளித்துள்ளார். அது பற்றி மேலும் டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு. “இங்கிலாந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் அட்டாக் செய்து விளையாடுவதிலேயே குறியாக உள்ளனர்”

இதையும் படிங்க:145 வருஷமா யாரும் பண்ணாத சாதனையை பண்ண ஆஸ்திரேலிய வீரருக்கு ஏற்பட்ட விபரீதம் – இப்படியா ஆகனும்?

“அப்படி நீங்கள் விளையாடும் போது ஈகோ உங்களை வீழ்த்தி விடும். அதனாலேயே போப், டூக்கெட் அவுட்டானார்கள். மறுபுறம் ஆஸ்திரேலியா அந்த ஈகோவை பயன்படுத்தி ரூட்டையும் அவுட்டாக்கினர். அதனால் ஒரு கட்டத்தில் இப்போட்டியில் இங்கிலாந்து மேலே இருந்தாலும் கடைசியில் சரணடைந்து விட்டது” என்று கூறினார்.

Advertisement