145 வருஷமா யாரும் பண்ணாத சாதனையை பண்ண ஆஸ்திரேலிய வீரருக்கு ஏற்பட்ட விபரீதம் – இப்படியா ஆகனும்?

Nathan-Lyon
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Nathan Lyon 1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கடந்த ஜூன் 28-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் விளையாடி வரும் நாதன் லயன் 145 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த ஒரு பந்துவீச்சாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தினார்.

அந்த சாதனை யாதெனில் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்து அசத்தியிருந்தார். இதற்கு முன்னதாக தொடர்ச்சியாக எந்த ஒரு இடைவெளியும் இன்றி ஐந்து பேட்ஸ்மேன்கள் மட்டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தனர்.

Nathan Lyon 2

இவ்வேளையில் முதல் பந்துவீச்சாளராக தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நாதன் லயன் வரலாற்று சாதனையை நிகழ்த்தி இருந்தார். அவரது இந்த சாதனைக்காக வாழ்த்துக்கள் குவிந்து வந்த வேளையில் தற்போது யார் கண் பட்டதோ தெரியவில்லை அவர் தனது நூறாவது டெஸ்ட் போட்டியின் பாதி ஆட்டத்துடன் வெளியேறியுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் அடித்த பவுண்டரியை தடுக்க நினைத்த நாதன் லயன் காலில் காயம் ஏற்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் மீண்டும் களத்திற்கு திரும்பாத அவர் மூன்றாம் நாளான இன்று மைதானத்திற்கு வரும்போது காலில் கட்டு போட்டு கையில் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வந்ததால் அவர் இந்த போட்டியில் விளையாட முடியாது என்று அனைவருக்கும் தெரிந்தது.

இதையும் படிங்க : புக்ல இல்லாத ஃபீல்டிங் வைப்பாரு, அவர மாதிரி கேப்டன நான் பாத்ததே இல்ல – வியந்து பாராட்டும் வெங்கடேஷ் ஐயர்

அதோடு இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிகாரபூர்வமாக அவர் வெளியேறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நிர்வாகமும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement