- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜடேஜாவின் அனுபவம் வேஸ்ட்.. பும்ராவை விட அதிகமா கிடைச்ச உதவியை விட்டாரு.. மஞ்ரேக்கர் விமர்சனம்

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்திய அணி 5 சதங்களை அடித்து அசத்தியது. ஆனால் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்கத் தவறினார்கள். அதே போல ஃபீல்டிங் துறையில் ஜெயஸ்வால், ஜடேஜா உள்ளிட்டவர்கள் கேட்ச்களை தவற விட்டார்கள்.

அது போக ஜஸ்ப்ரித் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் யாருமே இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலையும் சவாலையும் கொடுக்கவில்லை. அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து எளிதாக இந்தியாவை தோற்கடித்து தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் அப்போட்டியில் கடைசி நாளில் பும்ரா உள்ளிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச்சில் எந்த ஆதரவும் கிடைக்கவில்லை என்று சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஜடேஜாவின் அனுபவம்:

அதே சமயம் 4 நாட்கள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட காலடி (ரஃப்) தடங்களில் பந்து சுழலுக்கு சாதகமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதை 149 ரன்கள் அடித்து வெற்றியை பறித்த பென் டக்கெட்டுக்கு எதிராக ரவீந்திர ஜடேஜா சரியாக பயன்படுத்தவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். எனவே ரவீந்திர ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை வீணடித்து விட்டதாக தெரிவிக்கும் மஞ்ரேக்கர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பிட்ச் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை. அந்த பிட்ச்சில் பும்ராவால் கூட எதையும் செய்ய முடியவில்லை. காற்றிலும் உதவியும் கிடைக்கவில்லை. இது போக பும்ரா, ஜடேஜாவுக்கு எதிராக பென் டக்கெட் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார். அவரை சொந்த மண்ணில் நடைபெற்ற 2024 தொடரில் கூட ஜடேஜா அவுட்டாக்கியதாக எனக்குத் தெரியவில்லை”

- Advertisement -

மஞ்ரேக்கர் விமர்சனம்:

“அப்படி உங்களுடைய 2 முன்னணி பவுலர்களுக்கு எதிராக செட்டிலான இங்கிலாந்து பேட்ஸ்மேன் விளையாடினால் அவர்களுக்கு வெற்றி உறுதியாகி விடும். பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் பவுலர் மீது குறைகள் இருந்தாலும் அதை விமர்சனம் செய்வது நியாயமற்றது. ஆனால் ஜடேஜாவை நான் விமர்சிப்பேன். ஏனெனில் கடைசி நாளில் பிட்ச்சில் அவருக்கு உதவி செய்ய ரஃப் இருந்தது”

இதையும் படிங்க: தோல்விக்கு இதான் காரணம்.. கம்பீர் இந்த விடயத்தில் இந்திய வீரர்களை மன்னிக்க கூடாது – ரவி சாஸ்திரி கருத்து

“அது வழக்கமான இங்கிலாந்து சூழ்நிலைகள் கிடையாது. அந்த காலடிகளை பென் ஸ்டோக்ஸ்க்கு எதிராக ஜடேஜா பயன்படுத்தவில்லை. மிகவும் தாமதமாக பென் டக்கெட்டுக்கு எதிராக பயன்படுத்தினார். ஆனால் அவரைப் போன்ற அனுபவமிக்க பவுலர் அதை அதிகம் பயன்படுத்துவார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். அங்கே தான் ஜடேஜா ஏமாற்றத்தைக் கொடுத்தார் என்று நினைக்கிறேன். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த உதவியும் இல்லாத பிட்ச்சில் ஜடேஜாவுக்கு கொஞ்சமாவது உதவி இருந்தது” என்று கூறினார்.

- Advertisement -