தோல்விக்கு இதான் காரணம்.. கம்பீர் இந்த விடயத்தில் இந்திய வீரர்களை மன்னிக்க கூடாது – ரவி சாஸ்திரி கருத்து

Ravi Shastri
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஜூன் 20-ஆம் தேதி துவங்கிய ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயத்த 371 ரன்கள் என்ற இலக்கினை மிகச் சிறப்பாக விரட்டிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 373 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கம்பீர் வீரர்களிடம் கருணை காட்டக்கூடாது – ரவி சாஸ்திரி :

இந்த போட்டியின் போது இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும் கடைசி நாளில் 350 ரன்களை தடுத்து நிறுத்த முடியாமல் தோல்வி அடைந்துள்ளது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் போட்டிகளின் போது ஒரு நாளுக்கு 350 ரன்கள் அதுவும் கடைசி நாளான ஐந்தாம் நாளில் அடிப்பதெல்லாம் மிகக் கடினமான ஒரு விடயம்.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை வெகு சிறப்பாக எதிர்கொண்ட இங்கிலாந்து வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிக எளிதாக வெற்றி பெற்றிருந்தார்கள். இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி அடைந்த தோல்விக்கு என்ன காரணம்? அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் செய்த தவறுகளை கம்பீர் சுட்டிக்காட்டி வீரர்களை கண்டிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரை பெரியளவு பிரச்சனை கிடையாது. டாப் ஆர்டர் வீரர்கள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிகச் சிறப்பாக விளையாடினர். ஆனால் பின் வரிசையில் இந்திய அணியின் வீரர்கள் பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. இந்த விடயத்தை உடனடியாக கவனிக்க வேண்டும்.

- Advertisement -

அதேபோன்று பந்துவீச்சிலும் நமது அணி சிறப்பாக செயல்பட்டாலும் பீல்டிங்கில் மிகப்பெரிய குறை இருந்ததாக பார்க்கிறேன். அணியின் கேப்டனாக சுப்மன் கில் நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டார். ஆனால் வீரர்கள் கேட்ச்களை தவற விடுவது என்பது அவரது கையில் கிடையாது. நமது வீரர்கள் எளிதாக வந்த பல கேட்ச்களை தவற விட்டுள்ளனர். அதன் காரணமாகவே இங்கிலாந்து அணி போதுமான ரன்களையும் குவித்தது.

இது இந்திய அணியின் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. டெஸ்ட் போட்டியின் போது விக்கெட்டுகளை வீழ்த்துவது என்பது முக்கியம். 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் தான் டெஸ்ட்டில் வெற்றிபெற முடியும். அப்படிப்பட்ட சூழலில் கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் நாம் சிறப்பாக பயன்படுத்த வேண்டும். பீல்டிங்கில் இப்படி இத்தனை கேட்ச்களை தவறவிட்டால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது.

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு இந்த 2 பேர் தான் காரணம் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி

எனவே யாராக இருந்தாலும் சரி இந்த போட்டியில் தவறவிடப்பட்ட கேட்ச்களை சுட்டிக்காட்டி வீரர்களை கண்டிக்க வேண்டும். அதேபோன்று முன்னேற்றம் காண வேண்டிய வீரர்களுக்கு கூடுதல் பயிற்சி அமர்வுகளை கொண்டுவர வேண்டும் என்றும் ரவி சாஸ்திரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement