
இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். இந்த தொடரில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரரான விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக கடைசி நேரத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பினை பெற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அற்புதமான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை விளாசிய அவர் ஆட்டமிழக்காமல் இந்திய அணியையும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவரது பெயர் இடம்பெறவில்லை.
மீண்டும் விராட் கோலி அணிக்கு திரும்பியதால் அவரது பெயர் இடம் பெறாமல் போனது. இவ்வேளையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கு இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது மிகப்பெரிய தவறு என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் சாடியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்த வாய்ப்புகளை அவர் மிகச் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அவரை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது தவறான ஒரு விடயம். என்னை பொருத்தவரை ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ச்சியான வாய்ப்பினை வழங்கிஇருக்க வேண்டும். ஏனெனில் அவர் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 சதங்களை அடித்துள்ளார். ஆனால் நட்சத்திர அந்தஸ்து இருக்கும் வீரர்களை கருத்தில் கொண்டு ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பு இங்கு மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இன்னும் 1 விக்கெட் போதும்.. ஒருநாள் போட்டிகளில் முக்கிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா
இதுபோன்று இந்திய அணியில் தேர்வு நடக்கக்கூடாது. பெரிய வீரர்களின் செல்வாக்கிற்கு பயந்து முடிவுகளை எடுப்பது இந்திய கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை தாண்டி அணிக்கு எது நல்லதோ அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.