சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அடுத்த மாதம் ஆரம்பத்தில் இங்கிலாந்து சென்றடையும் என்றும் கூறப்படுகிறது. இவ்வேளையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் இடம் பிடித்துள்ளார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தவுள்ள சாதனை :
கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பும்ரா கடைசியாக விளையாடியிருந்தார். அதன்பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் கழித்து இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்கு கம்பேக் கொடுக்க உள்ளார்.
இதன் காரணமாக இந்த இங்கிலாந்து தொடரில் அவரது செயல்பாடு எவ்வாறு இருக்கப்போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஒருநாள் போட்டிகளில் மகத்தான ஒரு சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தப்போகும் சாதனை யாதனில் : கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான பும்ரா இதுவரை 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 149 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோஹித், கோலியை பின்னுக்கு தள்ளிய – சுப்மன் கில்
இதன் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் மேலும் ஒரு விக்கெட் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைவார். நிச்சயம் அது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே நிகழும் என்பது உறுதி.



