என்னுடைய இந்த லிஸ்ட்ல விராட் கோலிக்கு என்னைக்குமே இடமில்லை – சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சை

Sanjay
- Advertisement -

இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி சமீபத்தில் படிப்படியாக அந்த பதவிகளில் இருந்து விலகி தற்போது 2016க்கு பின் மீண்டும் இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்ஷிப் பல விமர்சனங்களை சந்தித்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரின் கேப்டன்ஷிப் உலகம் முழுவதிலும் பாராட்டுகளை பெற்றது. ஏனெனில் அவர் கேப்டனாக பொறுப்பேற்ற போது ஐசிசி தரவரிசையில் 7வது இடத்தில் தத்தளித்த இந்தியாவை 2016 முதல் 2021 வரை தொடர்ந்து 5 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்தார்.

- Advertisement -

சிறந்த டெஸ்ட் கேப்டன்:
ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று வரலாற்றில் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்த விராட் கோலி இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்தார். மொத்தத்தில் 68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளை பெற்றுள்ள அவர் இந்தியாவின் மிகச்சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற சாதனையுடன் விடை பெற்றுள்ளார்.

வெள்ளைப்பந்து உலககோப்பைகள் போலவே 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த வரலாற்றின் முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்தியா தோல்வியடைந்து மீண்டும் ஏமாற்றத்துடன் வெளியேறியது. உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது ஒரு குறை என்றாலும் அதற்காக அவரின் கேப்டன்ஷிப் மோசம் என்று கூற முடியாது.

kohli

கப் வாங்கலையே :
இந்நிலையில் ஒரு ஐசிசி உலகக்கோப்பையை வெல்ல முடியாத விராட்கோலி என்றுமே தன்னை பொருத்தவரை ஒரு சிறந்த கேப்டன் கிடையாது என முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்று அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “எவ்வித தயக்கமும் இன்றி எம்எஸ் தோனி இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு மகத்தான கேப்டன் ஆவார். பொதுவாக சர்வதேச கிரிக்கெட்டையும் ஐசிசி தொடர்களையும் வைத்து கேப்டன்களை நான் மதிப்பிடுவேன்.

- Advertisement -

ஏனெனில் அதில் தான் உங்களை உண்மையாக சோதிக்க முடியும். பை லேட்ரல் தொடர்களில் நீங்கள் விளையாடுவது என்பது அலுவலகத்தில் வேலை செய்து நேராக விட்டு வீட்டுக்கு திரும்புவது போன்றதாகும். அதில் எப்போதுமே அழுத்தம் கிடையாது. ஆனால் ஐசிசி தொடர்களில் பிரஷர் அதிகமாகும். அதனால்தான் எம்எஸ் தோனி மிகச் சிறந்தவர்” என கூறியுள்ள மஞ்ச்ரேக்கர் ஐசிசி தொடரில் கோப்பையை வெல்பவர் தான் உண்மையான கேப்டன் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

kohli

சிறந்த கேப்டன் இல்லை :
“எனவே வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்கள் பற்றி பட்டியலிடும்போது அதில் தோனிக்கு இடமில்லை என்றால் அது நியாயமே இல்லை. உலக அளவில் கடினமான அணிகள் இருந்தபோது கபில்தேவ் வென்று காட்டினார். அதேபோல சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த இந்தியாவை காப்பாற்றிய கங்குலி வெளிநாடுகளில் வெற்றி வெற்றி பெற செய்தார். சுனில் கவாஸ்கர் அதே வகையை சேர்ந்தவர்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் என்பது 10 வருடங்களில் தொடங்கியதல்ல. ஆகவே இவர்களை விராட் கோலியை விட சிறந்த கேப்டன்களாக என நான் கருதுகிறேன், இருப்பினும் விராட் கோலி அவரது பாணியில் மிகச் சிறந்த கேப்டன் ஆவார்” என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய கிரிக்கெட்டில் தனது மகத்தான கேப்டன்கள் வரிசையில் விராட் கோலிக்கு இடமில்லை என கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

kohli umpire

போராட்ட குணம்:
உலககோப்பையை வாங்கி கொடுக்காவிட்டாலும் எவ்வளவு மோசமான சூழ்நிலையாக இருந்தாலும் ஆக்ரோஷமாக போராடும் குணத்தை மற்ற கேப்டன்களை காட்டிலும் இந்திய அணியில் விராட் கோலி ஆழமாக பதிவிட்டு சென்றுள்ளார். அதுபற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில்,

- Advertisement -

“விராட் கோலி பற்றி பார்க்கும்போது அவரிடம் சில நல்ல அம்சங்களும் உள்ளது. குறிப்பாக அணியை முன்னின்று வழி நடத்துவதில் அவர் சிறந்தவர். 2018 தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் தோற்று 2 – 0 என பின்தங்கிய போதும் கூட ஜோகனஸ்பர்க் டெஸ்டில் அவரின் கேப்டன்ஷிப் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. “எப்போதும் முடியாது என்ற வார்த்தை கிடையாது” என்ற குணத்தை இந்திய அணியில் உட்புகுத்திய பெருமை விராட் கோலியை சேரும்” என பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க : IPL 2022 : பெங்களூரு அணி மீண்டும் அவரை கண்டிப்பா ஏலத்தில் எடுக்கும் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

விராட் கோலி தலைமையில் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி, 2019 உலககோப்பை, 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய ஐசிசி தொடர்களில் நாக்அவுட் சுற்று வரை சென்று தோற்ற இந்தியா கடைசியாக 2021 டி20 உலக கோப்பையில் லீக் சுற்றுடன் நடையை கட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement