- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐ.பி.எல் மட்டும் ஆடமுடியுது.. இந்தியாவுக்காக விளையாட கசக்குதா? ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து – சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. அதேவேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ஏசியன் கேம்ஸ் போட்டிக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக அனைத்து போட்டியிலும் விளையாடியிருந்தார்.

ஜஸ்ப்ரீத் பும்ரா குறித்து விமர்சித்த : சஞ்சய் மஞ்சரேக்கர்

ஆனால் தற்போது இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடாமல் பணிச்சுமை காரணமாக ஓய்வு எடுத்துள்ளார். அதோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையை கருத்தில் கொண்டும் அவருக்கு இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா ஐ.பி.எல் போட்டிகளில் என்றால் முழுமையாக விளையாடுகிறார் என்றும் தேசிய அணிக்காக விளையாடும்போது பணிச்சுமையை காரணம் காட்டி ஓய்வெடுப்பது தவறு என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்துள்ளார். குறித்து பேசிய அவர் கூறுகையில் :

என்னை பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். ஏனெனில் முதன்மை வேகபந்து வீச்சாளராக இருக்கும் அவர் எவ்வளவு போட்டிகளில் விளையாட முடியுமோ அவ்வளவு போட்டிகளிலும் விளையாட வேண்டும். ஆனால் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியை தொடர்ந்து ஹார்டிக் பாண்டியாவும் ஒருநாள் தொடரில் இருந்து விலகல் – காரணம் என்ன?

அதை தவிர்த்து இந்திய அணிக்காக விளையாட வரும்போது முக்கிய போட்டிகளில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். அவரது முதன்மை கவனம் இந்திய அணிக்காக விளையாடுவதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -