உலகக்கோப்பை இந்திய டி20 அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. ஏன் தெரியுமா? – சஞ்சய் மஞ்சரேக்கர்

Manjrekar
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வருகிறார். அவருக்கு ஒருநாள் வாய்ப்பு முற்றிலுமாக பறி போயுள்ளது என்று கூறலாம். ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் நிச்சயம் தான் இந்திய அணிக்காக உலக கோப்பையில் விளையாடி வெற்றி பெற்று தர வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று ஏற்கனவே தினேஷ் கார்த்திக் தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார்.

karthik

- Advertisement -

அதுமட்டுமின்றி நடப்பு ஐபிஎல் தொடரில் தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிச்சயம் இந்திய டி20 அணிக்கு மீண்டும் திரும்புவேன் என்றும் அதன் மூலம் உலகக் கோப்பை டி20 அணியில் இடம் பெற்று விளையாடுவேன் என்றும் அவர் கூறியிருந்தார். அதற்கேற்றார்போல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இதுவரை 200+ ஸ்ட்ரைக் ரேட் உடன் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணி சரிவில் இருக்கும்போதெல்லாம் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அதோடு சில போட்டிகளை அவர் அபாரமாக தனியாக நின்று வெற்றியும் பெற்று கொடுத்துள்ளதால் நிச்சயம் அவர் இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீண்டும் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Karthik-2

தினேஷ் கார்த்திக் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக தான் விளையாடி வருகிறார் அதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் மீதமுள்ள பாதி தொடரை அவர் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பது ஒரு பக்கம் இருக்கிறது. அதோடு சேர்த்து தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெற வேண்டுமெனில் அணியில் இருந்து யாரை நீக்க முடியும்? குறிப்பாக தினேஷ் கார்த்திக் விளையாட வேண்டும் என்றால் 5,6,7 என பின்வரிசையில் மட்டும்தான் விளையாடுவார்.

- Advertisement -

அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியாவை நீக்க முடியுமா? அல்லது ஜடேஜாவை நீக்க முடியுமா? அல்லது ரிஷப் பண்ட்டை தான் நீக்க முடியுமா? அந்த இடத்தில் யாரையும் நீக்க முடியாது எனவே நிச்சயம் தினேஷ் கார்த்திக் இந்திய டி20 அணியில் தேர்வாவது கடினம்தான் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ராஜஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நம்ம அஷ்வின் ! டி20 கிரிக்கெட்டில் புதிய டாப் டக்கர் சாதனை

அதோடு எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கு நிச்சயம் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் தேர்வாக ரிஷப் பண்ட் தான் இருப்பார் என்றும் பேக்கப் கீப்பர்களாக ஏற்கனவே இஷான் கிஷன் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் இருப்பதால் நிச்சயம் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement