IND vs AUS : இந்த மேட்ச்ல அஷ்வின் 6 விக்கெட் எடுத்துட்டு சிரிக்க இதுவே காரணம் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி மார்ச் 9-ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி செல்லும் என்பதால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

Cameron-Green

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலாவதாக பேட்டிங் செய்து தங்களது முதல் இன்னிங்ஸ்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 480 ரன்களை குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி சார்பாக கவாஜா 180 ரன்களையும், கேமரூன் கிரீன் 114 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதனை தொடர்ந்து தற்போது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டம் நேரம் முடிவில் விக்கெட் இழப்பின்று 36 ரன்களை எடுத்துள்ளது. இதன் காரணமாக 444 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்த முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 91 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளைப் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மேஞ்சரேக்கர் கூறுகையில் :

- Advertisement -

இந்த ஆடுகளத்தில் பந்தினை எவ்வளவு மெதுவாக வீசுகிறீர்களோ அந்த அளவிற்கு மைதானம் பவுலிங்குக்கு கை கொடுக்கும். இதனை அஸ்வின் இறுதியாக தான் கண்டுபிடித்தார். அதன் காரணமாகவே அவருக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பலமுறை அவர் ஐந்து விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தாலும் தற்போது அவர் வீழ்த்திய ஐந்து விக்கெட்டுகள் அவருக்கு சிறப்பான ஒன்று.

இதையும் படிங்க : பாகிஸ்தானின் பாபர் அசாம் ரசிகர்கள் இவ்வளவு கேவலமானவர்களா? ஸ்க்ரீன் ஷாட்டை அம்பலப்படுத்தி – சைமன் டௌல் ஆதங்கம்

ஏனெனில் ஆடுகளம் அவருக்கு உதவவில்லை என்று தெரிந்தவுடன் பந்தின் வேகத்தினை அவர் குறைத்தார். இதன் காரணமாகவே அவருக்கு விக்கெட்டும் கிடைத்தது. தனது பந்துவீச்சிற்கு சாதகமில்லா இந்த தட்டையான ஆடுகளத்தில் இப்படி விக்கெட்டுகள் கிடைத்ததால் தான் அவர் மிகவும் சிரித்தார் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement