பாகிஸ்தானின் பாபர் அசாம் ரசிகர்கள் இவ்வளவு கேவலமானவர்களா? ஸ்க்ரீன் ஷாட்டை அம்பலப்படுத்தி – சைமன் டௌல் ஆதங்கம்

Simon Doull Babar azam
- Advertisement -

பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் பெஷாவர் அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்த கேப்டன் பாபர் அசாம் சதமடித்து 114 (65) ரன்கள் குவித்தார். ஆனாலும் அதை துரத்திய எதிரணிக்கு முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து அடித்து நொறுக்கிய ஜேசன் ராய் 145 (63) ரன்களை குவித்து தோல்வியை பரிசளித்தார். முன்னதாக சமீப காலங்களாகவே தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் பாபர் அசாம் விளையாடி வருவது நிறைய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

அந்த நிலையில் இந்த போட்டியிலும் முதல் 44 பந்துகளில் 80* ரன்கள் எடுத்த பாபர் அசாம் சதமடிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் தடவலாக பேட்டிங் செய்து அடுத்த 16 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்து சதத்தை பூர்த்தி செய்தார். அது இறுதியில் பெசாவர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் அதிருப்தியடைந்த முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டௌல் “சதங்கள் அடிப்பது சிறப்பானது. புள்ளி விவரங்கள் அபாரமானது. ஆனால் நீங்கள் முதலில் அணிக்காக தான் விளையாட வேண்டும். சதத்திற்காக விளையாட கூடாது” என்று தொலைக்காட்சி வர்ணனையில் நேரடியாக பாபர் அசாமை விமர்சித்தார்.

- Advertisement -

கேவலமான பாக் ரசிகர்கள்:
அவரது விமர்சனங்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் பாபர் அசாம் ரசிகர்களை கோபப்படுத்தியது. அதனால் சில பாபர் அசாம் ரசிகர்கள் நேரடியாக சைமன் டௌல் ட்விட்டர் கணக்கில் இமெயில் முகவரியை மாற்றி சில குளறுபடியான வேலைகளை செய்தனர். அதை விட சில ரசிகர்கள் அவருடைய குடும்பத்தை இழுத்து அருவருக்க தக்க வகையில் மோசமான கெட்ட வார்த்தைகளில் திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளனர்.

அதனால் அதிருப்தியடைந்த சைமன் டௌல் அந்த ரசிகர் அனுப்பிய மோசமான வார்த்தைகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து பாகிஸ்தான் ரசிகர்களின் மோசமான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார். குறிப்பாக “உங்களை கோபமடைய வைத்ததற்கு மன்னிக்கவும். ஆனால் என்னுடைய நியாயமான கருத்துக்களை வர்ணனையாளராக தெரிவிப்பதற்காகத் தான் நான் சம்பளத்தை பெறுகிறேன். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் பரவாயில்லை. ஆனால் இது போன்ற மோசமான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தனது குடும்பத்தை திட்டிய பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

அவர் அம்பலப்படுத்தியுள்ள ஸ்க்ரீன் ஷாட்டில் உள்ள வார்த்தைகளை பார்க்கும் இதர ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் இவ்வளவு கேவலமானவர்களா? என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் வர்ணையாளராக பாபர் அசாம் செயல்பாடுகளை அதுவும் நல்ல வார்த்தைகளில் ஆரோக்கியமான விமர்சனமாகவே சைமன் டௌல் முன் வைத்தார். ஒருவேளை அதைப் பிடிக்கவில்லை என்றால் அவரை திட்டுவதில் கூட நியாயம் இருக்கிறது. ஆனால் அவரது குடும்பத்தை இழுத்து திட்டுவதில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று பாகிஸ்தான் மற்றும் பாபர் அசாம் ரசிகர்களை இதர ரசிகர்கள் ஒன்று சேர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சதம் கூட அடிக்காத சைமன் டௌல் பாபர் அசாம் பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் என்று சில பாகிஸ்தான் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்தனர். ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளரான சைமன் டௌல் எப்படி சதமடிக்க முடியும் என்று அதற்கு பதிலடி கொடுத்த இந்திய ரசிகர்கள் அது கூட தெரியாமல் பாகிஸ்தான் ரசிகர்கள் வடிகட்டிய முட்டாள்களாக இருப்பதாக கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க:WTC ஃபைனல் : இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் இலங்கை, 4வது போட்டியில் ஆஸியிடம் தோற்றால்? கால்குலேட்டர் முடிவுகள் இதோ

மொத்தத்தில் விமர்சனங்கள் என்பது கிரிக்கெட்டில் சர்வ சாதாரணமானது என்ற நிலைமையில் அதை ஆரோக்கியமான முறையில் முன்வைத்த சைமன் டௌலை அத்துமீறி திட்டிய பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நியூசிலாந்து ரசிகர்களும் இந்தியா போன்ற இதர நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement