WTC ஃபைனல் : இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் இலங்கை, 4வது போட்டியில் ஆஸியிடம் தோற்றால்? கால்குலேட்டர் முடிவுகள் இதோ

IND vs SL
- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது உலக சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக கடந்த 2021 முதல் பல்வேறு நாடுகளில் பல்வேறு தொடர்களாக நடைபெற்று வந்த லீக் சுற்றில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் போன்ற அணிகள் தேவையான வெற்றிகளை பதிவு செய்ய தவறியதால் ஆரம்பத்திலேயே ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தன. மறுபுறம் ஆரம்பம் முதலே தேவையான வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதலிரண்டு போட்டிகளில் தோற்றாலும் 3வது போட்டியில் வென்றது.

அதனால் வரும் ஜூன் 7 – 11 வரை லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டிக்கு முதல் அணியாக 68.52% புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் 60.29% புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு 90% வாய்ப்புகள் இருந்தாலும் அதற்கு 53.33% புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் இலங்கை மிகப்பெரிய தொல்லை கொடுத்து வருகிறது.

- Advertisement -

கால்குலேட்டர் முடிவுகள்:
அதாவது மார்ச் 9 தேதி அகமதாபாத் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் கடைசி போட்டியில் வென்றால் ஃபைனலுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நல்ல நிலைமையில் இருக்கும் இந்தியா தனது விதியை தனது கையில் வைத்திருக்கிறது. ஆனாலும் அப்போட்டியின் முதலிரண்டு நாட்களில் ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டு 480 ரன்கள் குவித்துள்ளதால் இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது. மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை முதல் போட்டியில் 355 ரன்கள் குவித்து 2வது நாள் முடிவில் நியூசிலாந்தை 162/5 என்ற ஸ்கோரில் கட்டுப்படுத்தி வெற்றியை பிரகாசப்படுத்தியுள்ளது.

ஆனால் தற்போதைய நிலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது போட்டியில் இந்தியாவின் வெற்றி உறுதியாக இல்லாத நிலைமையில் ஒருவேளை ட்ரா அல்லது தோல்வியை சந்தித்தால் ஃபைனலுக்கு செல்ல முடியுமா என்பதே இந்திய ரசிகர்களின் கலக்கமாக இருந்து வருகிறது. அதை அலசி ஆராய்வோம்:

- Advertisement -

1. முதலில் 4வது டெஸ்ட் போட்டியில் வெல்லும் பட்சத்தில் 60.29% புள்ளிகளுடன் இருக்கும் இந்தியா 62.50% புள்ளிகளைப் பெற்று ஃபைனலுக்கு தகுதி பெறும். ஒருவேளை தோற்றால் 56.90% அல்லது டிரா செய்தால் 58.79% என தற்போதுள்ள புள்ளிகள் குறையும்.

2. எனவே வெற்றியை தவிர்த்து எந்த முடிவைக் கண்டாலும் அதன் பின் ஃபைனலுக்கு செல்ல இந்தியா நியூசிலாந்தின் கைகளை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதாவது தற்போது 53.33% புள்ளிகளுடன் 3வது இடத்தில் இருக்கும் இலங்கை முதல் போட்டியில் வெல்லும் பட்சத்தில் 57.58% புள்ளிகளை பெறும்.

- Advertisement -

3. மறுபுறம் ஏற்கனவே 4வது போட்டியில் இந்தியா தோற்றிருக்கும் என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியிலும் அந்த அணி நிச்சயம் வென்றாக வேண்டும். அப்படி நியூசிலாந்துக்கு எதிராக 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றால் 61.10% புள்ளிகளுடன் இந்தியாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு முன்னேறும் இலங்கை ஜூன் மாதம் நடைபெறும் பைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள 2வது அணியாக தகுதி பெறும்.

4. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட 52.77% புள்ளிகளை மட்டுமே பெறக்கூடிய அந்த அணியால் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாது. அதே போல 2 போட்டிகளில் ஒன்றில் ட்ராவை சந்தித்தாலும் 55.55% என்ற புள்ளிகளை மட்டுமே பெறக்கூடிய இலங்கையால் ஃபைனலுக்கு செல்ல முடியாது.

இதையும் படிங்க:வீடியோ : இதெல்லாம்மா ரிவியூ எடுப்பாங்க, இந்தியாவின் பரிதாப முடிவை சிரித்து கலாய்த்த அம்பயர் – கிண்டலடித்த டிகே

5. அதனால் மறுபுறம் 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றாலும் 56.90% புள்ளிகளைப் பெற்று ஃபைனலுக்கு தகுதி பெற்று விடும். எனவே இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் வெல்ல வேண்டும். அல்லது தோற்றால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இலங்கை ஒரு டிரா அல்லது தோல்வியை சந்திக்க வேண்டும்.

Advertisement