- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இதே வலையில் விராட் கோலி இருந்திருந்தா மண்ணை கவ்விருப்பாரு.. ஜெய்ஸ்வால் – ராகுலை பாராட்டிய மஞ்ரேக்கர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் நகரில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆரம்பத்திலேயே நிதானமாக விளையாடினர்.

நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மறுபுறம் இங்கிலாந்து பவுலர்கள் அவர்களைப் பிரிப்பதற்காக அனைத்து யுக்திகளையும் கையாண்டனர். குறிப்பாக பிரபலமான அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளை தொடர்ச்சியாக வீசிய அவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலைக் கொடுத்தனர்.

- Advertisement -

92 ரன்கள் பார்ட்னர்ஷிப்:

ஆனால் அதற்காக அசராத ஜெய்ஸ்வால் – ராகுல் ஆகியோர் அந்த பந்துகளை பொறுமையுடன் தவற விட்டு மற்ற பந்துகளில் ரன்கள் குவித்தனர். அந்த வகையில் 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்த போது ராகுல் 42 ரன்னில் அவுட்டானார். இந்நிலையில் இதுவே விராட் கோலியாக இருந்திருந்தால் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தில் தம்முடைய விக்கெட்டை விட்டு மண்ணை கவ்வியிருப்பார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ஏனெனில் பெரிய அனுபவத்தைக் கொண்ட விராட் கோலி கடந்த ஆஸ்திரேலிய தொடரில் 10 இன்னிங்ஸில் 9 முறை அந்த பந்துகளில் தம்முடைய விக்கெட்டை இழந்தார். இத்தனைக்கும் அதைத் தொடாதீர்கள் என்று பல முன்னாள் வீரர்கள் சொல்லியும் விராட் கோலி கேட்கவில்லை. கடைசியில் அதுவே அவருடைய ஓய்வுக்கு முக்கிய காரணமானது என்று சொல்லலாம்.

- Advertisement -

மண்ணை கவ்வி இருப்பார்:

இது பற்றி கோலியின் பெயரைக் குறிப்பிடாமல் மஞ்சரேக்கர் பேசியது பின்வருமாறு. “அவுட் சைட் ஆஃப் பகுதிகளில் வீசப்படும் பந்துகள் தவற விடப்பட்டன. அதை சரியாக செய்த ஜெய்ஸ்வால் பிட்ச் அப், ஸ்டம்ப், ஒய்ட் பகுதிகளில் வீசப்படும் பந்துகளில் ரன்கள் அடித்தார். கேஎல் ஒருமுறை கூட அந்த பந்தை அடிக்க முயற்சிக்கவில்லை. ஒரே ஒரு ஃபுல் அவுட் சைட் ஆஃப் பந்தில் சிங்கிள் எடுத்த அவர் ஒய்டாக வீசப்படும் போது கவர் டிரைவ் அடித்தார்”

இதையும் படிங்க: சாய் சுதர்சன் ஆடுறது ஓகே.. ஆனா 8 வருஷமா காத்திருக்கும் அவருக்கு ஏன் வாய்ப்பு தரல – ரசிகர்கள் கேள்வி

“அந்த வகையில் விளையாடிய இந்த பேட்ஸ்மேன்களுக்கு தலை வணங்குகிறேன். இதுவே முன்னாள் பேட்ஸ்மேனாக இருந்திருந்தால் அந்த பந்தை அடிக்கச் சென்று தமக்கு தாமே பிரச்சனையை உருவாக்கியிருப்பார். ஆனால் இந்த இருவரும் அதைச் செய்யவில்லை” என்று கூறினார். மேலும் சாய் சுதர்சன் உட்பட தற்போதைய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து பேட்ஸ்மேன்களிடமும் நல்ல பேட்டிங் டெக்னிக் இருப்பதாகவும் மஞ்ரேக்கர் பாராட்டினார்.

- Advertisement -