இங்கிலாந்து அணிக்கு எதிராக இன்று ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பாக தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். அவருக்கு இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா தனது கையால் அறிமுக தொப்பியை வழங்கி வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். மேலும் இந்த போட்டியில் அவர் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்வதாக சுப்மன் கில்லும் டாசின் போது உறுதி செய்திருந்தார்.
27 சதங்களை அடித்த அவருக்கு ஏன் வாய்ப்பில்லை? : ரசிகர்கள் கேள்வி
ஐபிஎல் போட்டிகளில் கடந்து 2022 ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 12 அரைசதம் என 1793 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதோடு ஏற்கனவே இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் விளையாடிய அவரிடம் நல்ல பேட்டிங் டெக்னிக் இருப்பதினால் இந்த அறிமுக வாய்ப்பு வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டும் இன்றி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியதாலும் அவர்மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய நிர்வாகம் அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கி உள்ளதாக கூறப்பிடுகிறது.
ஒருபுறம் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி தான் என்றாலும் மறுபுறம் டெஸ்ட் அணியில் ஒரு வாய்ப்புக்காக 8 ஆண்டுகள் காத்திருக்கும் அபிமன்யு ஈஸ்வரனை ஏன் சேர்க்கவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த வகையில் தற்போது 23 வயதான சாய் சுதர்சன் இந்த போட்டியில் இடம் பிடித்துள்ள வேளையில் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய ஏ அணிக்கும் சரி, உள்ளூர் போட்டியிலும் சரி கேப்டனாகவும், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஏன் வாய்ப்பினை வழங்கவில்லை? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க : முதல் டெஸ்ட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வரும் 2 நாட்டு வீரர்கள்.. என்ன காரணம்? – விவரம் இதோ
அதுமட்டும் இன்றி முதல்தர கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 8,000 ரன்களையும், 27 சதங்களையும் விளாசிய அவருக்கு ஏன் இந்த வாய்ப்பை தரவில்லை என்றும், உள்ளூர் போட்டிகளில் விளையாடி என்ன பயன்? எதற்காக அவருக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது? என்பது போன்ற பல கேள்விகளை அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஆதரவாக ரசிகர்கள் எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.



