முதலில் தோனியின் அந்த வாசகத்தை ஃபாலோ பண்ணுங்க.. ரோஹித்துக்கு சஞ்சய் மஞ்ரேக்கர் அட்வைஸ்

Sanjay Manjrekar 2
- Advertisement -

இங்கிலாந்து எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில் வென்ற இந்தியா தொடரை சமன் செய்துள்ளது. இந்த தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா இது வரை நடைபெற்ற இரண்டு போட்டிகளிலுமே பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் சுமாராக விளையாடியது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய அவர் இத்தொடரிலும் சவாலான மைதானங்களில் ஆரம்பத்திலேயே எதிரணி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு நல்ல துவக்கத்தை கொடுத்து அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை நடந்த 2 போட்டிகளிலும் ஆரம்பத்திலேயே குறைந்த ரன்களில் அவுட்டான அவர் இதர பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

தோனி தாரக மந்திரம்:
இந்நிலையில் “முடிவை விட செயல்முறை முக்கியமானது” என்ற எம்எஸ் தோனியின் தாரக மந்திரத்தை முதலில் ரோஹித் சர்மா பின்பற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ரோஹித் சர்மா முதலில் பேட்ஸ்மேனாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினால் மட்டுமே பின்னர் கேப்டனாக சாதிக்க முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஈஎஸ்பிஎன் இணையத்தில் பேசிய பின்வருமாறு.

“கேப்டனாக அதிக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ரோகித் சர்மா சிக்கிக் கொள்கிறாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரோகித் சர்மா முதலில் பேட்ஸ்மேனாகவும் பின்னர் கேப்டனாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் கேப்டனாக நீங்கள் இருக்கும் போது பெரும்பாலான விஷயங்கள் உங்களுடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டிருக்கும்”

- Advertisement -

“எனவே எம்எஸ் தோனியின் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு சரியானவற்றை மட்டும் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். அதாவது கேப்டனாக நீங்கள் உங்களுடைய செயல்பாடுகளை செய்து சாதகமான விஷயங்கள் நடப்பதற்காக காத்திருங்கள். ஆனால் பேட்டிங் என்பது எப்போதுமே உங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியதாகும். ஒருவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக விளையாடிய ரோகித் சர்மா இத்தொடரில் விளையாடினால் அதை பார்ப்பது மகத்தானதாக இருக்கும்”

இதையும் படிங்க: தேவையான சான்ஸ் கொடுத்தாச்சு.. இனிமேலும் அவரை நம்பாம வேற பிளேயரை பாருங்க.. சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து

“கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் கூட அந்த பழைய ரோகித்தை நாம் பார்த்தோம். எனவே பேட்டிங்கில் சிறந்து விளங்கிய இடத்திற்கு அவர் திரும்பி செல்ல வேண்டும். ரோகித் சர்மா ரன்கள் எடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி, ராகுல், ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் இல்லாத நிலையில் ரோகித் சர்மா தான் பொறுப்புடன் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement