ராகுல் டிராவிட்டுக்கு அந்த பவர் இல்ல.. இது தெரியாம அவரை விமர்சிக்காதீங்க – இந்திய ரசிகர்களுக்கு மஞ்ரேக்கர் கோரிக்கை

Sanjay Manjrekar 2
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 10,000 ரன்கள் அடித்துள்ள ராகுல் டிராவிட் ஒரு வீரராக இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து ரசிகர்கள் மனதில் எப்போதுமே நீங்காத இடம் பிடித்துள்ளார். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமையின் சிகரமாக அதிக பந்துகளை எதிர்கொண்டு உலக சாதனை படைத்துள்ள அவர் இந்திய கிரிக்கெட்டின் பெருஞ்சுவர் என்று போற்றப்படுகிறார்.

இருப்பினும் ஒரு பயிற்சியாளராக தற்சமயத்தில் அவர் பல இந்திய ரசிகர்களுக்கு பிடிக்காதவராகவே இருக்கிறார் என்றால் மிகையாகாது. இத்தனைக்கும் 2016 முதல் என்சிஏ இயக்குனராக இருந்த அவர் அண்டர்-19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராகவும் செயல்பட்டு தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாகவே 2021இல் ரவி சாஸ்திரிக்கு பின் அவர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றது ரசிகர்களுடைய மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

மஞ்ரேக்கர் கோரிக்கை:
இருப்பினும் சீனியர் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றது முதல் சோதனை என்ற பெயரில் அவர் செய்யும் ஏராளமான மாற்றங்கள் இந்திய அணியை எப்போதுமே செட்டிலாகி விளையாட விடவில்லை என்றே சொல்லலாம். எடுத்துக்காட்டாக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவை 7வது இடத்தில் களமிறக்கியதை சொல்லலாம்.

அத்துடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அஸ்வினை தேர்ந்தெடுக்காத அவருடைய சோதனைகள் இந்தியாவுக்கு 2022 டி20 உலக கோப்பை போன்ற வேதனையான தோல்விகளையே பரிசளித்து வருகிறது. அதனால் 2023 உலகக் கோப்பையுடன் அவர் இந்த பதவியிலிருந்து சென்றால் போதும் என்று ரசிகர்கள் வெளிப்படையாக பேசுவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு இந்திய அணியில் பெரிய மாற்றங்களை செய்யும் அதிகாரம் ராகுல் டிராவிட்டுக்கு இல்லை என்று சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி விமல் குமார் யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட் பயிற்சியாளர்களை ரசிகர்கள் கால்பந்து பயிற்சியாளர்களுடன் ஒப்பிட்டு குழப்பமடைந்து விடுகிறார்கள். ஏனெனில் கிரிக்கெட்டில் இருக்கும் பயிற்சியாளர்களுக்கு பெரிய அதிக அதிகாரம் இருக்காது. குறிப்பாக அணியை தேர்வு செய்யும் போது பெரிய மாற்றங்களை அவர்களால் செய்ய முடியாது. அதனாலேயே சமீபத்திய தேர்வுக்குழு கூட்டத்தில் அவர் இடம் பெறாததை நீங்கள் பார்த்திருக்க முடியும்”

இதையும் படிங்க: சச்சின் மாதிரி இப்போதைய பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்யாததற்கு காரணம் அந்த ரூல்ஸ் தான்.. ஐசிசி மீது பழியை போட்ட டிராவிட்

“மேலும் அணி வெற்றி அல்லது தோல்வியை பதிவு செய்யும் போது அதில் பயிற்சியாளரின் பங்கும் குறைவாகவே இருக்கும். அத்துடன் ரோகித் சர்மா மிகவும் அனுபவமிக்கவர். அவரைப்போல அணியில் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்றனர். மொத்தத்தில் பயிற்சியாளரை விட தேர்வுக்குழு தலைவருக்கு தான் அதிக அதிகாரம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என கூறினார். இந்த நிலையில் 2023 உலகக்கோப்பை வெற்றியை பொறுத்தே டிராவிட்டின் அடுத்த பதவி காலம் தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement