சச்சின் மாதிரி இப்போதைய பேட்ஸ்மேன்கள் பவுலிங் செய்யாததற்கு காரணம் அந்த ரூல்ஸ் தான்.. ஐசிசி மீது பழியை போட்ட டிராவிட்

Rahul Dravid 4
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 உலகக் கோப்பைக்கு இறுதி கட்டமாக தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணியில் இருக்கும் ஓரிரு எஞ்சிய குறைகளையும் சரி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஆஃப் ஸ்பின்னர் இல்லாத குறையை தீர்ப்பதற்காக ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

ஏனெனில் கேஎல் ராகுல், பும்ரா போன்ற காயத்தை சந்தித்துள்ள வீரர்கள் குணமடைந்து ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணியை பலமாக்கியுள்ளது. அதே போல இடது கை பவுலர்களுக்கு எதிராக தடுமாறிய விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆசிய கோப்பையில் சாகின் அப்ரிடியை சிறப்பாக எதிர்கொண்டு தங்களது தரத்தை நிரூபித்தனர். மேலும் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத பிரச்சனையை இசான் கிசான் தீர்த்து மிடில் ஆர்டரை வலுப்படுத்துவதற்கு தயாராக இருக்கிறார்.

- Advertisement -

ரூல்ஸ் மீது பழி:
அப்படி பெரும்பாலான குறைகள் 2023 ஆசிய கோப்பையில் தீர்க்கப்பட்ட போதிலும் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது டாப் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பவுலர்களாக மாறி பந்து வீசுவதற்கு தயாராக இல்லை என்பது இப்போதும் இந்திய அணியில் இருக்கும் ஒரு முக்கிய ஓட்டையாகும். குறிப்பாக சச்சின், சேவாக், ரெய்னா போல தற்போதைய பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுவதற்கு தயாராக இல்லை.

அது ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணம் என்று அனில் கும்ப்ளே போன்ற முன்னாள் வீரர்கள் சமீப காலங்களில் விமர்சித்துள்ளனர். இந்நிலையில் இதற்கு ஐசிசி கொண்டு வந்துள்ள புதிய விதிமுறை தான் காரணம் என்று தெரிவிக்கும் ராகுல் டிராவிட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது உள்வட்டத்திற்குள் 4 ஃபீல்டர்களுக்கு பதிலாக 5 பேர் நிற்க வேண்டும் என்று திடீரென கொண்டுவரப்பட்ட விதிமுறையால் ஏற்பட்டதாகும். அதுவே மிடில் ஓவர்களில் பகுதி நேர பவுலர்கள் பந்து வீசுவதை மொத்தமாக குறைத்து விட்டது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

“குறிப்பாக சச்சின், ரெய்னா, கங்குலி, சேவாக் போன்றவர்கள் உள்வட்டத்திற்குள் 4 ஃபீல்டர்கள் நிற்கும் விதிமுறைகள் இருந்த போதே பந்து வீசினார்கள். அந்த விதிமுறையால் இந்திய அணி மட்டுமல்லாமல் பல அணிகள் பகுதி நேர பவுலர்களை இழந்துள்ளனர். மேலும் ஒரு இன்னிங்ஸில் 2 புதிய பந்துகள் மற்றும் உள்வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் முதன்மையான பவுலர்களையே தேர்ந்தெடுத்த விரும்புகின்றனர்”

இதையும் படிங்க: IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய – 2 முக்கிய வீரர்கள்

“எனவே இதற்கான தீர்வு என்ன? அதற்கு அதிக ஆல் ரவுண்டர்களை கண்டறிவது சிறந்த முடிவாக இருக்கும். அதே சமயம் நாங்கள் அந்த அம்சத்தில் வேலை செய்யவில்லை என்று அர்த்தமல்ல. நாங்களும் பகுதி நேர பவுலர்களை உருவாக்குவதற்கான வேலைகளை செய்து வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement