IND vs AUS : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய – 2 முக்கிய வீரர்கள்

IND-vs-AUS
- Advertisement -

பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதோடு உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சிகளையும் அவர்கள் இங்கேயே மேற்கொள்ள உள்ளதால் இந்த இந்திய அணிக்கு எதிரான தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 22-ஆம் தேதி நாளை துவங்கி செப்டம்பர் 27-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக கே.எல் ராகுல் முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மூன்றாவது போட்டிக்கான அணியில் மீண்டும் அனைவரும் அணிக்கு திரும்புவதால் அந்த போட்டியில் முக்கிய மாற்றங்கள் நிகழும் என்றும் கூறப்படுகின்றன.

இந்நிலையில் இந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நாளை மொஹாலி நகரில் நடைபெறவுள்ள வேளையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான மிட்சல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே கடந்த சில மாதங்களாகவே ஓய்வில் இருந்து வந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்கள் இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரிலேயே மீண்டும் அணிக்கு திரும்பியிருந்த வேளையில் உலக கோப்பையை கருத்தில் கொண்டு பணிச்சுமையை குறைக்கும் வகையில் அவர்கள் இருவரும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : திடீர்னு எதையும் செய்யல.. இதெல்லாம் ட்ரைல் சான்ஸ் தான்.. எங்களோட திட்டமே வேற.. அஸ்வின் கம்பேக் பற்றி டிராவிட் வெளிப்படை

இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான எஞ்சிய இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 2-3 என்ற கணக்கில் அந்த தொடரை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement