திடீர்னு எதையும் செய்யல.. இதெல்லாம் ட்ரைல் சான்ஸ் தான்.. எங்களோட திட்டமே வேற.. அஸ்வின் கம்பேக் பற்றி டிராவிட் வெளிப்படை

Rahul Dravid 3
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 22ஆம் தேதி மொகாலியில் துவங்குகிறது. விரைவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு இறுதி கட்டமாக தயாராக உதவும் இந்த தொடரில் திடீரென்று தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர சீனியர் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நிறைய முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில் கடைசியாக 2022 ஜனவரி மாதம் விளையாடியிருந்த அவர் கடந்த ஒன்றரை வருடங்களாக எவிதமான ஒருநாள் போட்டிகளிலும் விளையாடாத நிலையில் 2023 ஆசிய கோப்பையிலும் தேர்வு செய்யப்படவில்லை. இருப்பினும் நடைபெற்று முடிந்த 2023 ஆசிய கோப்பையில் கடைசி நேரத்தில் அக்சர் படேல் காயமடைந்து வெளியேறினார். மேலும் 2023 உலகக்கோப்பை அணியில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் லெக் ஸ்பின் அல்லது இடது கை ஸ்பின்னர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

டிராவிட் விளக்கம்:
எனவே எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களை திணறடிக்க ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற நோக்கத்தில் தற்போது தேர்வாகியுள்ள அஸ்வின் 2023 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 2011 உலகக் கோப்பை போன்ற வெற்றிகளில் பங்காற்றி ஏகப்பட்ட அனுபவத்தை கொண்ட அஸ்வினை 2023 உலகக் கோப்பைக்கு தேவைப்பட்டால் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற திட்டத்தை ஏற்கனவே வைத்திருந்ததாக ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

அதனால் திடீரென அணிக்குள் கொண்டுவரப்படவில்லை என்று தெரிவிக்கும் அவர் ஆஸ்திரேலிய தொடரில் அஸ்வின் திறமை மீது எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முன்பாக அவர் பேசியது பின்வருமாறு. “அவரை போன்ற தரம் மற்றும் அனுபவம் கொண்டவரை யாராவது காயமடைந்தால் உடனடியாக உங்களால் அணிக்குள் அழைக்க முடியும். அதாவது எந்த நேரத்திலும் தரமான அஸ்வினை அணிக்குள் கொண்டு வரலாம் என்ற திட்டத்தை நாங்கள் ஏற்கனவே மனதில் வைத்திருந்தோம்”

- Advertisement -

“எனவே நீண்ட நாட்கள் கழித்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கு திரும்பும் அவருக்கு இது நல்ல வாய்ப்பாகும். இருப்பினும் இது சோதனை முயற்சி என்று நான் சொல்ல மாட்டேன். ஏனெனில் அவருடைய தரத்தை நாங்கள் அறிவோம். அதனால் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக தேவைப்படும் 2 – 3 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை அவருக்கு நாங்கள் வழங்க விரும்புகிறோம்”

இதையும் படிங்க: 2019 உ.கோ தொடரில் ரோஹித் செஞ்சதை இம்முறை அவர் செய்வாரு.. இளம் வீரருக்கு வாழ்த்துடன்.. பாராட்டிய சுரேஷ் ரெய்னா

“அவரைப் போன்றவர் கம்பேக் கொடுப்பது எங்களுக்கு நல்ல அம்சமாகும். ஏனெனில் அணிக்காக அவர் 8வது இடத்தில் பேட்டிங்கிலும் கணிசமாக பங்காற்றக்கூடிய அளவுக்கு திறமை கொண்டவர். எனவே யாராவது காயமடைந்தால் அந்த இடத்தை அவரை வைத்து நிரப்புவதற்கான திட்டம் எங்களிடம் எப்போதுமே இருந்து வருகிறது” என்று கூறினார்.

Advertisement