- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீர் இதுக்கெல்லாம் செட்டாக மாட்டார்.. நேரடியாக விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர் – என்ன நடந்தது?

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று மும்பையில் இருந்து பெர்த் நகருக்கு புறப்பட்டது. இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பயணிக்காததால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

கம்பீர் பத்திரிகையாளர் சந்திபில் கலந்துகொள்ளக்கூடாது :

அவரை தவிர்த்து மற்ற வீரர்கள் இரண்டு குழுக்களாக ஆஸ்திரேலியா புறப்பட்ட வேளையில் ஏற்கனவே விராட் கோலி தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சென்றடைந்துவிட்டார். இந்நிலையில் இந்த பயணத்திற்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கலந்து கொண்டார்.

- Advertisement -

அதில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு கெளதம் கம்பீர் தனது பாணியில் கொஞ்சம் அடாவடியாக பதில் கூறியிருந்தது சமூக வலைதளத்தில் பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கௌதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விதம் குறித்து கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில் கௌதம் கம்பீரின் இந்த செயல்பாடு குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில் : இனி செய்தியாளர் சந்திப்பிற்கு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அனுமதிக்க கூடாது.

- Advertisement -

ஏனெனில் அவர் பேசிய விடயத்தை நானும் பார்த்தேன். கம்பீருக்கு இதுபோன்ற வேலையெல்லாம் செட்டாகாது. இந்த விஷயத்தில் பிசிசிஐ கொஞ்சம் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : ரிஷப் பண்டை ஏலத்தில் எடுக்கப்போகிறோமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – காசி விஸ்வநாதன்

அதாவது இதுபோன்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீரை அனுப்புவதை விட அணியின் கேப்டனான ரோகித் சர்மாவையும், தலைமை தேர்வுக்குழு அதிகாரியான அஜித் அகார்கர் ஆகிய இருவரில் ஒருவரை அனுப்ப வேண்டும் என பி.சி.சி.ஐ-க்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -