இந்திய டெஸ்ட் அணிக்கு இனியும் அவர் தேவை. சீனியர் வீரரை பாராட்டிய – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 14-ஆம் தேதி சட்டகிராம் நகரில் துவங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

IND-vs-BAN

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா நகரில் துவங்க இருக்கிறது. இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக சீனியர் வீரர் புஜாரா திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறிய வேளையில் 90 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸின் போது வெற்றிக்கு தேவையான வேளையில் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் குவித்து அசத்தினார்.

புஜாராவின் இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணியின் மாபெரும் வெற்றிக்கு வித்திட்டது என்றால் அதுமிகையல்ல. இந்நிலையில் புஜாராவின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து பாராட்டி பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ரேக்கர் கூறுகையில் : இந்திய டெஸ்ட் அணிக்கு இனியும் புஜாரா தேவை என்றே நான் நினைக்கிறேன்.

Pujara 1

அவர் இன்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடக்கூடாது என்றும் தோன்றுகிறது. ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி, சுப்மன் கில் போன்ற வீரர்கள் கூட பார்மில் சில சறுக்களை சந்தித்து வந்தார்கள். ஆனால் புஜாரா ஒரு சிறிய சறுக்களை சந்தித்தாலும் மீண்டும் பலமாக திரும்பி வந்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த முறை இலங்கை அணிக்கு எதிரான ஒரு போட்டியின் போது அவர் மோசமான பார்ம் காரணமாக வெளியேற்றப்பட்டாலும் அதனை தொடர்ந்தும் தனது இடத்தை விடக்கூடாது என்று முயற்சித்த அவர் மீண்டும் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி மிகவும் பலமாக அணிக்கு திரும்பியுள்ளார். புஜாரா இப்படி மீண்டும் அணிக்கு திரும்பி அவரது திறனை வெளிக்காட்டி உள்ளது இன்னும் அவருக்குள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட காலங்கள் இருக்கிறது என்பதையே வெளிக்காட்டுகிறது.

இதையும் படிங்க : ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்த நட்சத்திர வீரர் – கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் – விவரம் இதோ

இங்கிலாந்து சென்று சசெக்ஸ் அணிக்காக விளையாடிய அவர் எட்டு போட்டிகளில் 1094 ரன்கள் குவித்தார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் வந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காகவும் சதம் அடித்து அசத்தியுள்ளார். இப்படி அவர் ஆடும் ஆட்டம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு பலமாக இருப்பதால் நிச்சயம் இன்னும் சில ஆண்டுகள் புஜாரா இந்திய டெஸ்ட் அணிக்கு அவசியம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement