ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்த நட்சத்திர வீரர் – கேஎல் ராகுலுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையின் 2022 – 23 சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் 26வது லீக் போட்டியில் எலைட் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன. டிசம்பர் 20ஆம் தேதியன்று மும்பையில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆரம்பத்திலேயே இளம் தொடக்க வீரே பிரித்வி ஷா 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் யஎஸ்எஸ்வி ஜெய்ஸ்வாலுடன் கை கோர்த்து 2வது விக்கெட்டுக்கு நங்கூரமாக நின்று 153 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 இன்னிங்ஸ் விளையாடி 15 பவுண்டரி 1 சிக்சருடன் 90 (80) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அவருக்குப்பின் களமிறங்கிய கேப்டன் அஜின்கிய ரகானேவுடன் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் 3வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 27 பவுண்டரி 1 சிக்ஸருடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இரட்டை சதமடித்த ரகானே:
ஆனால் மறுபக்கம் தனது அனுபவத்தை காட்டி சதமடித்து அற்புதமாக பேட்டிங் செய்த கேப்டன் ரகானே அடுத்து களமிறங்கிய இளம் வீரர் சர்ப்ராஸ் கானுடன் ஜோடி சேர்ந்து 5வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு 26 பவுண்டரி 3 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 204 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் பேட்டிங் செய்த சர்பராஸ் கான் தனது பங்கிற்கு சதமடித்து 126 ரன்கள் குவித்ததால் 651/6 ரன்கள் குவித்த மும்பை தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து விளையாடி வரும் ஹைதராபாத் 2வது நாள் முடிவில் 173/6 என்ற நிலையில் தடுமாறி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் முதல் நாளிலேயே சதமடித்த ரகானே 2வது நாளில் அற்புதமாக செயல்பட்டு இரட்டை சதமடித்து நல்ல பார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2011 முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் அவர் 2015 உலகக் கோப்பைக்கு பின் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை இழந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் துணை கேப்டனாகவும் படை தளபதியாகவும் அசத்தினார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

மொத்தம் 82 டெஸ்டில் 4931 ரன்களை குவித்துள்ள அவர் சொந்த மண்ணை விட லண்டன் லார்ட்ஸ் போன்ற வெளிநாடுகளில் பெரிய அளவில் ரன்களைக் குவித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வந்தார். இருப்பினும் 34 வயதை தொட்டுள்ள அவர் சமீப காலங்களில் சதமடிக்க முடியாமல் பெரிய ரன்களை குவிக்க தவறியதால் கடந்த பிப்ரவரி மாதம் மற்றொரு சீனியர் புஜாராவுடன் சேர்ந்த வாக்கில் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

ஆனால் அதில் மனம் தளராமல் போராடி கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் பெரிய அளவில் ரன்களை குவித்து புஜாரா ஏற்கனவே கம்பேக் கொடுத்துள்ள நிலையில் இவரும் தற்போது இரட்டை சதமடித்து தேர்வு குழுவை திரும்பி பார்க்க வைத்துள்ளார். இதே போல் இன்னும் ஓரிரு சதங்களை அடித்தால் நிச்சயமாக விரைவில் இவர் இந்திய அணிக்கு அதுவும் துணை கேப்டனாக திரும்புவார் என்று கூறலாம்.

- Advertisement -

ஏனெனில் 2020/21இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் 36 ரன்களுக்கு சுருண்டு வரலாற்றுத் தோல்வியை சந்தித்த இந்தியாவின் கேப்டன் விராட் கோலி நாடு திரும்பிய நிலைமையில் எஞ்சிய போட்டிகளில் அபாரமாக வழி நடத்திய அவர் 2 – 1 (4) என்ற கணக்கில் தொடரை வென்று சரித்திரத்தை படைத்து காட்டினார்.

இதையும் படிங்க: அவர் பேட்டிங் செய்ய வரும் போது சச்சின் களமிறங்கும் ஃபீலிங் வருது – ஆலன் டொனால்ட் பாராட்டு

அந்தளவுக்கு அனுபவம் கொண்டுள்ள அவர் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை என்பது மட்டுமே இந்திய அணியில் விளையாடுவதற்கான தடையாகும். தற்போது அதை உடைக்க துவங்கியுள்ள அவர் கம்பேக் கொடுத்தால் தற்சமயத்தில் சுமாரான பார்மில் இருந்தாலும் துணை கேப்டன் என்ற பதவியால் அணியில் காலத்தை தள்ளி வரும் கேஎல் ராகுல் அதிரடியாக நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தான் பெரும்பாலான இந்திய ரசிகர்களும் வரவேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement