அவர் பேட்டிங் செய்ய வரும் போது சச்சின் களமிறங்கும் ஃபீலிங் வருது – ஆலன் டொனால்ட் பாராட்டு

Donald
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து டிசம்பர் 22ஆம் தேதியன்று டாக்காவில் நடைபெறும் இத்தொடரின் 2வது போட்டியிலும் வென்று 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் போராட்டத்தில் மற்றுமொரு வெற்றியை பதிவு செய்ய இந்தியா தயாராகியுள்ளது. முன்னதாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் கடந்த 2011முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக செயல்பட்டு வரும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து 31 வயதிலேயே 70 சதங்களை விளாசி சாதனை படைத்தார்.

Virat Kohli

- Advertisement -

ஆனால் 2019க்குப்பின் சரிவை சந்தித்து அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் தவித்த அவரை அணியிலிருந்து நீக்குமாறு நிறைய முன்னாள் வீரர்கள் போர் கொடி உயர்த்தினார்கள். இருப்பினும் மனம் தளராமல் சமீபத்திய ஆசிய கோப்பையில் 1020 நாட்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக சதமடித்து தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்கிய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். அந்த நிலைமையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 1214 நாட்கள் கழித்து தன்னுடைய 44வது சதத்தை அடித்துள்ள அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வருகிறார்.

சச்சின் பீலிங்:
அந்த மோசமான கதைக்கும் இந்த வருடமே முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கும் அவர் முதல் போட்டியில் 1, 19* என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் கடைசி வாய்ப்பான 2வது போட்டியில் சதமடிப்பதற்காக தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்ய பெவிலியனிலிருந்து களமிறங்கினால் சச்சின் டெண்டுல்கர் வருவதைப் போன்ற உணர்வு தோன்றுவதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் மற்றும் வங்கதேசத்தின் பவுலிங் பயிற்சியாளர் ஆலன் டொனால்ட் பாராட்டியுள்ளார்.

Sachin

அந்தளவுக்கு தரமான அவரை இத்தொடரில் இது வரை தங்களது பவுலர்கள் கட்டுப்படுத்தியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி 2வது போட்டிக்கு முன் நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “அவரது விக்கெட் மிகப்பெரிய பரிசாகும். அவருக்கு எதிராக பந்து வீசுவது சச்சின் டெண்டுல்கருக்கு எதிராக பந்து வீசுவது போன்றதாகும். குறிப்பாக அவர் பேட்டிங் செய்ய களமிறங்கும் போது சீக்கிரம் அவுட்டாக்குவது மிகவும் முக்கியமானது என்பது உங்களுக்கு தெரியும்”

- Advertisement -

“எனவே விராட் கோலிக்கு எதிராக ஒரு சிறு வாய்ப்பை நீங்கள் தவற விட்டால் கூட இறுதியில் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பீர்கள். ஏனெனில் அதன் பின் அவர் அதிக வாய்ப்புகள் கொடுக்க மாட்டார். அவருக்கு எதிராகவும் ராகுலுக்கு எதிராகவும் இது வரை நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். குறிப்பாக விராட் கோலி போன்றவர் பேட்டிங் செய்ய வரும் போது லாவா போன்ற மிகப்பெரிய பாறைக்கு எதிராக பந்து வீசும் உணர்வை நீங்கள் பெறுவீர்கள்”

Donald-2

“அவரை பார்த்து அவருக்கு எதிராக பந்து வீசும் போதே நம்முடைய உடல் வெப்பம் அதிகரிக்கும். என்னை பொறுத்த வரை நாளையும் அது மாறாது என்பதில் சந்தேகமில்லை. மேலும் இந்த டெஸ்ட் தொடரை சதமடித்து வெற்றியுடன் நிறைவு செய்வதற்கு விராட் கோலி மிகுந்த பசியுடன் பேட்டிங் செய்வார் என்பதையும் நான் அறிவேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் கையில் காயத்தை சந்தித்த ராகுல் – 2வது டெஸ்டில் விளையாடுவாரா? பேட்டிங் கோச் கொடுத்த அறிக்கை இதோ

முன்னதாக 90களில் சச்சின் டெண்டுல்கருக்கு சவால் கொடுத்த உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களில் ஆலன் டொனால்ட் முக்கியமானவராக கருதப்படுகிறார். அப்படிப்பட்ட அவர் விராட் கோலி களமிறங்கும் போது சச்சினை பார்ப்பது போன்ற உணர்வு வருவதாக தெரிவிப்பது உண்மையாகவே இந்திய ரசிகர்களை பெருமை கொள்ள வைக்கும் அம்சம் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement