கடைசி நேரத்தில் கையில் காயத்தை சந்தித்த ராகுல் – 2வது டெஸ்டில் விளையாடுவாரா? பேட்டிங் கோச் கொடுத்த அறிக்கை இதோ

Rahul-Dravid-and-KL-Rahul
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக 2023ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா முதல் போட்டியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி பெரிய வெற்றியை சுவைத்தது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

எனவே எஞ்சியிருக்கும் வெற்றியை டிசம்பர் 22ஆம் தேதியன்று துவங்கும் 2வது போட்டியில் வசப்படுத்த தயாராகும் இந்தியா அப்போட்டி நடைபெறும் தாக்கா கிரிக்கெட் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இத்தொடரில் முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, பும்ரா என முக்கிய வீரர்கள் காயத்தால் களமிறங்காத நிலையில் கேப்டன் ரோகித் சர்மாவும் ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் கையில் சந்தித்த காயத்தால் கடைசி நேரத்தில் வெளியேறினார். இருப்பினும் 2வது போட்டியில் விளையாடுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் இத்தொடரிலிருந்து அவர் மொத்தமாக வெளியேறுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது.

ராகுலும் காயம்:
அந்த நிலையில் அவருக்கு பதிலாக துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த ராகுல் முதல் போட்டியில் இந்தியாவை வழி நடத்தி வெற்றியும் பெற்றுக் கொடுத்தார். இருப்பினும் சமீப காலங்களாகவே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சுமாரான பார்மில் தவிக்கும் அவர் முதல் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் பெரிய ரன்களை குவிக்கவில்லை. ஆனாலும் இதர வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக தோல்விகளை மட்டுமே சந்தித்த அவரது பெயரில் முதல் முறையாக வெற்றியை சேர்த்தார்கள்.

KL-Rahul

அந்த வகையில் இத்தொடரில் கடமையை நிறைவேற்றும் வேலையை செய்து வரும் அவர் 2வது போட்டிக்காக தாக்கா மைதானத்தில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பந்தை தவற விட்ட அவர் கையில் அடி வாங்கி காயத்தை சந்தித்தார். அதனால் முழுமையான பயிற்சிகளை செய்ய முடியாத அவர் பாதியிலேயே மைதானத்திலிருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக 2வது டெஸ்ட் துவங்குவதற்கு இன்னும் 12 மணி நேரங்கள் கூட இல்லாத நிலையில் கடைசி நேரத்தில் அவர் காயத்தை சந்தித்தது அணி நிர்வாகத்துக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

அந்த நிலையில் கேஎல் ராகுல் பெரிய அளவில் காயத்தை சந்திக்கவில்லை என்று தெரிவித்த பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் 2வது போட்டியில் அவர் விளையாடுவார் என்று நம்புவதாக தெரிவித்தார். இது பற்றி 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக நிகழ்ந்த சம்பிரதாய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த காயம் மிகவும் தீவிரமாக இருப்பதாக தெரியவில்லை. அவரும் நல்லபடியாகவே காட்சியளிக்கிறார். அந்த வகையில் அவர் நன்றாக இருக்கிறார் என்று நம்புகிறேன். இருப்பினும் அவரை மருத்துவர்கள் சோதித்து முதலுதவி செய்து வருகிறார்கள். ஆனாலும் கூட அவர் சரியாகி விடுவார் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.

rathore

முன்னதாக பயிற்சியின் போது விக்ரம் ரத்தோர் வீசிய பந்துகளில் தான் ராகுல் காயமடைந்ததாக தெரிகிறது. அதனால் ரோகித் சர்மாவை போல் பெரிய அளவில் காயத்தை சந்திக்காத அவர் முதலுதவி எடுத்துக்கொண்டு 2வது போட்டியில் விளையாடுவார் என்று நம்புவதாக விக்ரம் ரத்தோர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: IND vs BAN : நாளைய 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஒருவேளை கடைசி நேரத்தில் காயத்தால் ராகுல் வெளியேறும் பட்சத்தில் முதல் போட்டியில் துணை கேப்டனாக செயல்பட்ட மற்றொரு நட்சத்திர மூத்த வீரர் செடேஸ்வர் புஜாரா 2வது போட்டியில் இந்தியாவை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த வருடம் காயம் மற்றும் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுத்த ரோஹித் சர்மாவால் வரலாற்றிலேயே முதல் முறையாக ஏற்கனவே வெவ்வேறு 7 வீரர்களை இந்தியா கேப்டனாக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement