IND vs BAN : நாளைய 2 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

IND-vs-BAN
- Advertisement -

வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இழந்தது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

அந்த வகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது அடுத்ததாக நாளை டிசம்பர் 22-ஆம் தேதி டாக்கா மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வங்கதேச அணியை வீழ்த்த தயாராகி வருகிறது. அந்த வகையில் நாளை டிசம்பர் 22-ஆம் தேதி டாக்காவில் நடைபெற இருக்கும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

ஏனெனில் சமீப காலமாகவே இந்திய முதன்மை அணியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இந்திய அணியின் மீது எழுந்துள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்ட அபிமன்யு மிதுன், முகமது ஷமிக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஜெயதேவ் உனட்கட் மற்றும் ஆல்ரவுண்டர் சௌரவ் குமார் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

Shubman Gill 1

இந்நிலையில் நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலாவது புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது வரை வெளியான அறிவிப்பின்படி நாளைய இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. மேலும் முதல் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற அதே அணி தான் இரண்டாவது போட்டியிலும் விளையாடும் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் இந்த இரண்டாவது போட்டியில் அணியில் தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்த நிர்வாகம் விரும்பவில்லை என்பதனால் முதல் போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்களே இரண்டாவது போட்டியிலும் விளையாடுவார்கள். அதன்படி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வீடியோ : எதிரணி வீரர் என்று கூட பாராமல் பங்களாதேஷ் அணி வீரருக்கும் பேட்டிங் ஆலோசனை வழங்கும் டிராவிட்

1) கே.எல் ராகுல், 2) சுப்மன் கில், 3) சத்தீஷ்வர் புஜாரா, 4) விராட் கோலி, 5) ரிஷப் பண்ட், 6) ஷ்ரேயாஸ் ஐயர், 7) அக்சர் படேல், 8) ரவிச்சந்திரன் அஷ்வின், 9) குல்தீப் யாதவ், 10) உமேஷ் யாதவ், 11) முகமது சிராஜ்.

Advertisement