வீடியோ : எதிரணி வீரர் என்று கூட பாராமல் பங்களாதேஷ் அணி வீரருக்கும் பேட்டிங் ஆலோசனை வழங்கும் டிராவிட்

Mushfiqur Rahim Rahul Dravid
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை மெஹதி ஹசன் மேஜிக் செயல்பாடுகளால் 2 – 1 (3) என்ற கணக்கில் கைப்பற்றி வரலாறு படைத்தது. அதைத்தொடர்ந்து நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இருப்பினும் ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் கோட்டை விட்ட அந்த அணி டிசம்பர் 22ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியில் வென்று குறைந்தபட்சம் 1 – 1 (2) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர போராட உள்ளது.

முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த தாக்கா மைதானத்தில் தான் இந்த 2வது டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் வங்கதேசத்துக்கு கூடுதல் சாதகம் ஏற்பட்டுள்ளது. எனவே அதில் சிறப்பாக செயல்பட்டு ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்ப்பதற்காக தாக்கா மைதானத்தில் வங்கதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கேப்டன் சாகிப் அல் ஹசன் நேற்று முன்தினம் கால்பந்து உலக கோப்பையை தமக்கு பிடித்த அர்ஜென்டினா அணி வென்றதால் மெஸியின் ஜெர்ஸியை அணிந்து கொண்டு சக வீரர்களுடன் தாக்கா மைதானத்தில் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் கோச்சிங்:
அவருடன் வங்கதேச ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடிய மற்றொரு நட்சத்திர வீரர் முஸ்பிகர் ரஹீம் இன்று நடைபெற்ற 2வது வலை பயிற்சியில் தீவிரமான பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார். ஏனெனில் வங்கதேசம் வெற்றி பெறுவதற்கு அவரை போன்ற முக்கிய வீரர் பெரிய ரன்களை குவிப்பது அவசியமாகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் 18, 12, 7, 28, 23 என இது வரை ஒரு அரை சதம் கூட அடிக்காத அவர் இந்த 2வது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது பெரிய ரன்களை குவித்து தமது அணியை வெற்றி பெற வைக்க தீவிர பயிற்சிகளை மேற்கொண்டார்.

அந்த நிலையில் அதே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை நேரில் சந்தித்த அவர் தமக்கும் பேட்டிங் பயிற்சிகளை கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். பொதுவாகவே நல்ல மனம் கொண்ட ராகுல் டிராவிட் அவரது கோரிக்கையை ஏற்று எப்படி ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிக்க வேண்டும் என்பது போன்ற நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

மேலும் எப்படி திடமான டிஃபன்ஸ் ஆட வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்த அவரது வார்த்தைகளை நீண்ட நேரமாக நின்று உன்னிப்பாக கேட்ட முஸ்பிகர் ரஹீம் இறுதியில் மகிழ்ச்சியாக அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பொதுவாகவே இந்தியாவுக்கு எதிராக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துபவராக அறியப்படும் ரஹீம் கடந்த 2007 வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையில் விளையாடி தோல்வியை பரிசளித்த இன்னிங்ஸை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வங்கதேச வீரராக சாதனை படைத்துள்ள அவர் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள பேட்ஸ்மேனாகவும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அதை விட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 இரட்டை சதங்களை அடித்த முதல் மற்றும் ஒரே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: IPL 2023 : மினி ஏலத்தில் 5 தமிழக வீரர்களை விலைக்கு வாங்க சி.எஸ்.கே திட்டம் – யார் அந்த 5 பேர்

அதனாலேயே வங்கதேசத்தின் டான் பிராட்மேன் என்று அந்நாட்டு ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 3 இரட்டை சதங்களை அடித்துள்ள அவர் நல்ல அனுபவமிக்க வீரராக போற்றப்படும் நிலையில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஆலோசனைகளுடன் இந்தியாவுக்கு எதிரான 2வது போட்டியில் பெரிய ரன்களை அடிப்பார் என்று வங்கதேச ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement