IPL 2023 : மினி ஏலத்தில் 5 தமிழக வீரர்களை விலைக்கு வாங்க சி.எஸ்.கே திட்டம் – யார் அந்த 5 பேர்

CSK-Auction
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இதுவரை 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு 16-வது ஐபிஎல் சீசனானது வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

auction-1

- Advertisement -

இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் உலகெங்கிலும் இருந்து 405 கிரிக்கெட் வீரர்கள் ஏலத்திற்கான இறுதிப் பட்டியலில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்த வீரர்களில் இருந்து சுமார் 80 வீரர்கள் மட்டுமே அனைத்து அணிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதனால் தற்போது இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்த வருடம் ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிரிஸ் ஜோர்டன், பகத் வர்மா, கே.எம் ஆசிப், நாராயணன் ஜெகதீசன் ஆகியோரை விடுவித்துள்ளதால் அவர்களுக்கு மாற்றாக சில வீரர்களை எடுக்க முனைப்பு காட்டும் என்று தெரிகிறது.

Narayan Jagadesan Hari Nishanth

அந்த வகையில் இதுவரை சென்னை அணி பெயரில் மட்டும்தான் சென்னையை வைத்துக்கொண்டு இருக்கிறது என்றும் மற்றபடி தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற விமர்சனத்தை அண்மையில் சந்தித்து வரும் வேளையில் தற்போது அதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக வரவிருக்கும் 16-வது சீசனுக்கு சென்னை அணியில் ஐந்து தமிழக வீரர்களை ஏலத்தில் எடுக்க இருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகிய தற்போது அனைவருக்கும் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தமிழ்நாடு மாநில அளவில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜி.அஜிதேஷ், மணிமாறன் சித்தார்த், சூர்யா, சஞ்சய் யாதவ், நாராயணன் ஜெகதீசன் ஆகிய வீரர்களை சிஎஸ்கே அணி இந்த ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டப்படுவதாக தெரிகிறது.

இதையும் படிங்க : வீடியோ : மீண்டும் சீட்டிங் செய்த ஆஸி வீரர், கடைசியில் டு பிளேஸியிடம் மன்னிப்பு கேட்ட பரிதாபம் – நடந்தது என்ன

இப்படி ஒரு தகவல் வெளியானதும் ரசிகர்கள் மறுபுறம் சற்று வருத்தமும் அடைந்துள்ளனர். ஏனெனில் இவர்களை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து பெஞ்சில் அமர வைப்பதை விட எடுக்காமல் இருந்தால் அவர்கள் மற்ற அணிக்கு சென்று போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையாவது பெறுவார்கள் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement