வீடியோ : மீண்டும் சீட்டிங் செய்த ஆஸி வீரர், கடைசியில் டு பிளேஸியிடம் மன்னிப்பு கேட்ட பரிதாபம் – நடந்தது என்ன

Matthew Wade BBL
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பிரபல பிரீமியர் லீக் டி20 தொடரான பிக்பேஷ் தொடரின் 12வது சீசன் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 19ஆம் தேதியன்று நடைபெற்ற 8வது லீக் போட்டியில் ஹோபார்ட் மற்றும் பெர்த் ஆகிய அணிகள் மோதின. யோர்க் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹோபர்ட் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 172/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் மேத்தியூ வேட் 51 (29), டிம் டேவிட் 46* (28), டார்சி ஷார்ட் 35 (25), சடாப் கான் 22 (17) என முக்கிய வீரர்கள் தேவையான ரன்கள் எடுத்த நிலையில் பெர்த் சார்பில் அதிகபட்சமாக ஜே ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து 173 ரன்களை துரத்திய பெர்த் அணிக்கு 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தென்னாபிரிக்காவின் நட்சத்திரம் டு பிளஸிஸ் 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 32 (16) ரன்களில் அவுட்டானார். அவருக்குப் பின் மிடில் ஆர்டரில் ஜோஸ் இங்கிலீஷ் அதிரடியாக 62 (37) ரன்கள் குவித்த போதிலும் லித் 10, ஹோப்ஸன் 2, அஸ்டன் டர்னர் 20, ஹார்டி 12 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

மீண்டும் சீட்டிங்:
அதனால் 20 ஓவரில் 164/8 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. ஹோபார்ட் சார்பில் அதிகபட்சமாக பட்ரிக் டூலி 4 விக்கெட்டுகளை சாய்ந்தார். முன்னதாக இப்போட்டியில் 44 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் தனது அணியை அதிரடியாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற பப் டு பிளேஸிஸ் பட்ரிக் டூலி வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்டார். குறிப்பாக ஆன் சைடில் வந்து கவர் திசையில் சிக்சர் அடிப்பதற்காக ஒதுங்கிய அவரின் கவனத்தை பின்னாடி நின்று கொண்டிருந்த விக்கெட் கீப்பர் மேத்தியூ வேட் பந்தை எதிர்கொள்வதற்கு ஒரு சில நொடிகள் முன்பாகவே “போல்ட்” என்று சத்தமாக கூச்சலிட்டு திசை திருப்பினார்.

அதாவது போல்ட்டாகி விட்டீர்கள் என்று பந்தை எதிர்கொண்டு போல்ட்டாவதற்கு முன்பாகவே வேகமாக கத்திய அவரால் கடைசி நொடியில் கவனத்தை இழந்த டு பிளேஸிஸ் போல்ட்டானார். அப்போது “அவர் கவனத்தை சிதற வைத்து விட்டார்” என்ற வகையில் உடனடியாக டு பிளேஸிஸ் ரியாக்சன் கொடுத்த நிலையில் விக்கெட் விழுந்த மகிழ்ச்சியில் மேத்தியூ வேட் கொண்டாடினார். ஆனால் உண்மையாகவே இது ஒரு வகையான ஏமாற்று வேலை என்று தான் கூற வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் கிரிக்கெட்டில் பல தருணங்களில் பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக கடைசி சில நொடிகளில் கவனச்சிதறல் ஏற்படும் வகையில் ஏதாவது அசைவு ஏற்பட்டால் கூட உடனடியாக பந்தை எதிர்கொள்ளாமல் அதை சரி செய்யுமாறு நடுவரிடம் கோரிக்கை வைப்பார்கள். அதனால் வேகமாக ஓடி வந்து கடைசி நேரத்தில் நின்று கடுப்பான பவுலர்களை நாம் பலமுறை பார்த்துள்ளோம்.

அந்த நிலைமையில் விக்கெட் கீப்பராக பின்னாடி நின்று கொண்டு காதில் வேகமாக கத்தி டு பிளேஸிஸ் கவனத்தை திசை திருப்பி அவுட்டாக்கிய மேத்தியூ வேடை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள். குறிப்பாக 2022 டி20 உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து டி20 தொடரில் மார்க் வுட் கேட்ச்சை பிடிக்க விடாமல் தடுத்தவர் தானே நீங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சிக்கிறார்கள். அந்த நிலையில் முன்கூட்டியே தாம் அவ்வாறு கூச்சலிட்டது தவறு தான் என்று ஒப்புக்கொண்ட மேத்யூ வேட் டு பிளேஸியிடம் போட்டியின் முடிவில் தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்டார்.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட்டை மாற்ற அவரால் தான் முடியும், ஐபிஎல் தொடரில் பாண்டிங் அந்த முடிவை எடுக்கணும் – ப்ராட் ஹாக் கோரிக்கை

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டு பிளேஸிஸ் அதனால் ஏமாற்றம் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன். போல்ட் என நான் சற்று முன்கூட்டியே சொல்லிவிட்டேன். அந்த சமயத்தில் எப்படி அது என்னை மீறி வந்தது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அதனால் அவர் மிகவும் எரிச்சலாக இருந்தார். மன்னித்து விடுங்கள் பப்” என்று கூறினார்.

Advertisement