ஆசியக்கோப்பை 2023 : இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay-Manjrekar-1
- Advertisement -

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் ஆசிய கோப்பை வென்று அந்த நம்பிக்கையுடன் உலககோப்பை தொடரில் நுழையப்போகும் அணி எது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணி அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஏகப்பட்ட விவாதங்கள் சமூக வலைதளத்தில் இருந்து வருகின்றன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆசிய கோப்பை தொடரின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் விளையாட வேண்டும் அந்த அணியை அப்படியே உலகக் கோப்பை தொடருக்கு கொண்டு செல்லலாமா? வேண்டாமா? என்று பல்வேறு கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை தொகுத்து வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் தொகுத்து வழங்கியுள்ள அந்த பிளேயிங் லெவனில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் மூன்றாவது இடத்தில் விராட் கோலி, நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் அல்லது திலக் வர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி ஐந்தாவது இடத்தில் கே.எல் ராகுல், ஆறாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும், ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். அவர்களை தவிர்த்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி அவர் தேர்வு செய்த இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வீடியோ : யோயோ டெஸ்டுக்கு டஃப் கொடுக்கும் தல தோனியின் பிராக்டீஸ் – ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பாராட்டு

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர்/திலக் வர்மா, 5) கே.ல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) குல்தீப் யாதவ், 9) பும்ரா, 10) முகமது ஷமி, 11) முகமது சிராஜ்.

Advertisement