சச்சின், விராட் கோலி ஓரமா தான் நிக்கணும், ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல் டைம் லெஜெண்ட் அவர் தான் – சஞ்சய் மஞ்ரேக்கர்

Virat Kohli Sanjay Manjrekar
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் இந்திய பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள விராட் கோலி 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உலக தரமான பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். மேலும் 2019க்குப்பின் சரிவை சந்தித்த அவர் 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு சமீபத்திய இலங்கை தொடரிலும் அடுத்தடுத்த சதங்களை விளாசி முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளார். முன்னதாக ஆரம்ப காலம் முதலே டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வரும் விராட் கோலி இதுவரை 46 சதங்களை அடித்து 33 வயதிலேயே தன்னை ஜாம்பவானாக நிரூபித்துள்ளார்.

மேலும் முதலிடத்தில் 49 சதங்களுடன் இருக்கும் சச்சின் டெண்டுல்கரை விரைவில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் ஒட்டுமொத்தமாக 100 சதங்கள் உலக சாதனையையும் உடைக்க அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அப்போதெல்லாம் ஒரு போட்டிக்கு ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 2 பந்துகள் பயன்படுத்தப்படுவதுடன் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுவதால் விராட் கோலி அடிக்கும் சதங்களை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என்று கௌதம் கம்பீர் போன்ற சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

உண்மையான லெஜெண்ட்:
மேலும் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிகள் கூட ராஜாங்கம் நடத்திய 90களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சச்சின் டெண்டுல்கர் தான் ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்ற கருத்துகளும் எழுந்தன. இந்நிலையில் அந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கரும் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் சிறந்த வீரர்களாக திகந்தனர் என்பதில் சந்தேகமில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பவுலர்கள் ராஜாங்கம் நடத்திய 80களில் உலகின் அனைத்து அணிகளையும் அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீசின் விவ் ரிச்சர்ட்ஸ் தான் ஒருநாள் கிரிக்கெட்டின் உண்மையான தரமான வீரர் என்று பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நவீன கிரிக்கெட்டில் நீங்கள் பார்க்கும் போது கடந்த 20 வருடங்களில் விராட் கோலி சிறந்தவராக உள்ளார். டெண்டுல்கரும் வரலாற்றின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். மேலும் என்னுடைய புத்தகத்தில் விராட் கோலி ஒரு மிகச்சிறந்த ஒருநாள் வீரராகவே இடம் பிடிக்கிறார். அதே சமயம் எம்எஸ் தோனியும் அந்த இடத்தில் இருக்கும் ஒருவராக எனது மனதில் தோன்றுகிறார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல் டைம் சிறந்த பேட்ஸ்மேன் என்று வரும் போது யாருமே சர் விவ் ரிச்சர்ட்ஸ் அவர்களை நெருங்க முடியாது. நான் சொல்வது சற்று பழையதாக இருக்கலாம்”

- Advertisement -

“70 முதல் 90கள் வரை ரிச்சர்ட்ஸ் விளையாடிய அதே காலகட்டத்தில் விளையாடிய கோர்டன் க்ரீனிட்ஜ் போன்றவர்கள் 30 சராசரியையும் 60 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டிருந்தார்கள். மறுபுறம் உலகக் கோப்பை பைனல் உட்பட அந்த சமயத்தில் மிகச் சிறப்பாக விளையாடிய ரிச்சர்ட்ஸ் 47 சராசரியையும் 90 ஸ்ட்ரைக் ரேட்டையும் கொண்டிருந்தார். அதாவது அவரது காலத்தில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் அந்த சமயத்தின் ஜாம்பவானாக இருந்தார். அவ்வாறு தான் வரலாற்றின் சிறந்த வீரர்களை நீங்கள் ஒப்பிட வேண்டும். இருப்பினும் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலி சிறந்தவர் என்பதில் சந்தேகமில்லை”

“உங்களுக்கு நேரம் இருந்தால் ஒருநாள் போட்டிகளில் ரிச்சர்ட்ஸ் அவர்களின் புள்ளி விவரங்களை இப்போது விளையாடும் வீரர்களுடனும் அப்போது விளையாடிய வீரர்களுடனும் ஒப்பிட்டு பாருங்கள். அதில் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் நிறைய இருக்கும். விராட் கோலியும் அவ்வாறு செயல்பட்டுள்ளார். ஆனால் என்னை பொறுத்த வரை வரலாற்றின் மிகச்சிறந்த ஒரு நாள் வீரர் என்றால் அது சர் விவ்” என்று கூறினார்.

இதையும் படிங்க: IND vs NZ : ஷமியும், சிராஜும் ரெடியா இருந்தாங்க. நான் தான் அவங்கள ரிஜெக்ட் பண்ணேன் – ரோஹித் ருசிகரம்

அவர் கூறுவது போல என்ன தான் சச்சின், கங்குலி, பாண்டிங், விராட் கோலி என மகத்தானவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முன்பாகவே சர்வதேச கிரிக்கெட்டில் அதிரடியை அறிமுகப்படுத்தி அதன் வார்த்தைக்கு அர்த்தத்தை தெரிவித்த ரிச்சர்ட்ஸ் அவர்கள் மிகச் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement