IND vs NZ : ஷமியும், சிராஜும் ரெடியா இருந்தாங்க. நான் தான் அவங்கள ரிஜெக்ட் பண்ணேன் – ரோஹித் ருசிகரம்

Shami-and-Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் ஏட்டு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.

IND-vs-NZ

- Advertisement -

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலாவதாக பந்துவீசிய இந்திய அணி தங்களது சிறப்பான பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்து அணியை 34.3 ஓவர்களில் 108 ரன்களில் சுருட்டியது. பின்னர் 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 20.1 ஓவரில் இரண்டு விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமாக காரணமாக பந்துவீச்சாளர்கள் திகழ்ந்தனர். ஏனெனில் துவக்கத்திலிருந்தே ரன்களை விட்டுக் கொடுக்காமல் விக்கெட்டுகளை கைப்பற்றி வந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் டாப் 5 வீரர்களை 15 ரன்களுக்குள் சுருட்டி சாதனையை நிகழ்த்தினார்கள். அவர்களை 50 ஓவர் கூட பேட்டிங் செய்ய விடாமல் 34 ஓவர்களிலேயே சுருட்டி அசத்தினர்.

Mohammed Shami

இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் கடந்த ஐந்து போட்டிகளாக இந்திய அணி பெற்ற வெற்றிகளுக்கு பந்துவீச்சாளர்களே காரணம் என்று புகழாரம் சூட்டியிருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் சிராஜ் செய்த செயல்கள் குறித்தும் அவர் சில ருசிகரமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

முகமது ஷமி மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் பந்துவீச ஆரம்பித்ததும் துவக்கத்திலேயே அதிக ஓவர்களை வீசவேண்டும் என்று ஆர்வமாக என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தனர். நான்தான் அவர்கள் இருவரையும் அதிகமாக ஓவர்கள் வீச வேண்டாம் என்று அவர்களுடைய ஸ்பெல்லை முடிவுக்கு கொண்டு வந்தேன். ஏனெனில் அடுத்ததாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க : என்னோட புது ஜோடி எப்டி இருக்கு? இந்திய அணியில் சஹாலுடன் தைரியமாக பயணித்த பெண் யார்

அந்த டெஸ்ட் தொடருக்கும் அவர்கள் இருவரும் முக்கியமான வீரர்கள். எனவே அவர்களை கட்டுக்குள் வைத்து தொடர்ந்து பந்து வீசாமல் மற்ற பவுலர்களுக்கும் வாய்ப்பளித்தேன் என ரோகித் சர்மா ருசிகரமான தகவலை பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement