என்னோட புது ஜோடி எப்டி இருக்கு? இந்திய அணியில் சஹாலுடன் தைரியமாக பயணித்த பெண் யார்

Chahal Kuldeep Yadav
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் பந்து வீச்சில் மிரட்டலாக செயல்பட்டு நியூசிலாந்தை வெறும் 108 ரன்களுக்கு சுருட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அதனால் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி சுப்மன் கில், முகமது சிராஜ் போன்ற தரமான இளம் வீரர்களையும் கண்டறிந்து வருகிறது.

Shubman Gill Ishan Kishan

அதனால் சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ள இந்தியா அதே புத்துணர்ச்சியுடன் கடைசி போட்டியிலும் வென்று 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வெல்லப் போராட உள்ளது. மறுபுறம் கடந்த வாரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இத்தொடரில் களமிறங்கிய நியூசிலாந்து இந்தியாவிடம் சந்தித்து அடுத்தடுத்த தோல்விகளால் நம்பர் ஒன் இடத்தை இங்கிலாந்திடம் பறி கொடுத்து 2வது இடத்திற்கு சரிந்துள்ளது.

பெண்ணுடன் பயணம்:
அதனால் தலை குனிந்துள்ள நியூசிலாந்து ஜனவரி 24ஆம் தேதியன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்று குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து ஆறுதல் வெற்றி பெற போராட உள்ளது. அதில் பங்கேற்பதற்காக இரு அணிகளும் அப்போட்டி நடைபெறும் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகருக்கு விமானம் வாயிலாக பயணித்தனர். அப்போது மிகவும் அழகான பெண்ணுடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன் பாருங்கள் என்ற வகையில் ஒரு பெண் அருகில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை “ட்ராவல் பார்ட்னர்” என்ற தலைப்புடன் இந்திய வீரர் யுஸ்வென்ற சஹால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

Kuldeep Yadav

அதை பார்த்த ரசிகர்கள் “என்னப்பா இது இந்திய ஆடவர் அணியில் எப்படி ஒரு பெண் இருக்கிறார் அவர் யார்” என்று அலச துவங்கினர். ஆனால் அந்த புகைப்படத்தை நன்றாக உற்றுப் பார்க்கும் போது இது எடிட்டிங் என்பது ரசிகர்களுக்கு தெரிய வந்தது. குறிப்பாக ஏதோ ஒரு மொபைல் ஆப் பயன்படுத்தி மற்றொரு இந்திய வீரரான குல்தீப் யாதவ் புகைப்படத்தை பெண் போல மாற்றி சஹால் பதிவிட்டதும் தெரிய வந்தது. அதனால் கடுப்பாகும் ரசிகர்கள் “இருந்தாலும் உங்களுக்கு நக்கல் கொஞ்சம் ஓவர் தான்” என்று பதிலளிக்கிறார்கள். இருப்பினும் எடுத்த எடுப்பில் பார்க்கும் போது பெண் போல இருக்கும் குல்தீப் யாதவ் புகைப்படம் சமூக விடுதலங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே இது போன்ற சேட்டைகள் செய்யக்கூடிய சஹால் சமீப காலங்களில் தென் ஆப்பிரிக்காவின் தப்ரிஸ் சம்ஸி மற்றும் அம்பயர் போன்றவர்களிடம் ஜாலியான ஒரண்டைகள் செய்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்தியாவின் முதன்மை ஸ்பின்னர்களில் ஒருவராக கருதப்படும் அவர் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் சுமாராக செயல்பட்டதால் எஞ்சிய போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

CHahal Shamsi

இதையும் படிங்க: அவர் மினி ரோஹித் சர்மா, அடுத்த ஹிட்மேனா எதிரணிகளை பந்தாட போறாரு – இளம் வீரரை பாராட்டிய ரமீஸ் ராஜா

அவருக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற அவரது சுழல் பந்து வீச்சு ஜோடியான குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்று அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டு வருகிறார். அதே போல் 2வது ஸ்பின்னர் இடத்தில் வாய்ப்பு பெற்ற தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் இதே போல் இவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் 2022 டி20 உலகக் கோப்பை போலவே 2023 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் சஹாலின் இடம் கேள்விக் குறியாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement