அவர் மினி ரோஹித் சர்மா, அடுத்த ஹிட்மேனா எதிரணிகளை பந்தாட போறாரு – இளம் வீரரை பாராட்டிய ரமீஸ் ராஜா

Ramiz Raza Rohit Sharma
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பையை வெல்லும் லட்சியத்தை கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அதற்காக தயாராகும் வகையில் முதலில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக விளையாடி வரும் ஒருநாள் தொடரிலும் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (3) என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. உலக கோப்பைக்கு தேவையான தரமான இளம் வீரர்களை கண்டறியும் வேலையும் நடைபெறும் இந்த நேரத்தில் தடவலாக செயல்பட்ட ராகுலுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற சுப்மன் கில் அதை தனதாக்கும் அளவுக்கு அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Shubman Gill Ishan Kishan

- Advertisement -

2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியா வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் 2019இல் அறிமுகமாகி ஆரம்பத்தில் காயம் மற்றும் சுமாரான செயல்பாடுகளால் வெளியேறினார். அதன் பின் 2021இல் இந்தியா பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து அசத்தியிருந்த அவர் 2022 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்து அற்புதமாக செயல்பட்டதால் மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.

மினி ரோஹித் சர்மா:
அதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் டிசம்பரில் வங்கதேச மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் சதமடித்தார். ஆனாலும் இரட்டை சதமடித்த இசான் கிஷானுக்கு பதில் இவர் தேர்வு செய்யப்படுவது சரியா என்ற விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் வலுவான நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் இரட்டை சதமடித்த அவர் இஷான் கிஷனுக்கு தாம் எந்த வகையிலும் குறைந்தவன் அல்ல என்பதை நிரூபித்து உலகக்கோப்பை அணியில் தனது இடத்தை உறுதி செய்து வருகிறார்.

மேலும் 208, 40* என நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் பெரிய ரன்களை குவித்து வரும் அவர் இரட்டை சத்தத்தை ஹாட்ரிக் சிக்சருடன் அடித்து தம்மால் அதிரடியாகவும் விளையாட முடியும் என்பதையும் நிரூபித்தார். இந்நிலையில் சுப்மன் கில் மினி ரோகித் சர்மா போல இப்போதே அபாரமாக செயல்பட்டு வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் மற்றும் தலைவர் ரமீஷ் ராஜா வெளிப்படையாக பாராட்டியுள்ளார். மேலும் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் வெற்றி பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சுப்மன் கில் மினி ரோகித் சர்மாவை போல் காட்சியளிக்கிறார். அவரிடம் பந்தை நிதானமாக எதிர்கொள்ளும் அளவுக்கு எக்ஸ்ட்ரா டைமிங் உள்ளது. அவரிடம் சிறந்து விளங்குவதற்கு தேவையான திறமை அதிகமாகவே உள்ளது. மேலும் ஆக்ரோசம் என்பது அவரது செயல்பாடுகளில் ஏற்படும் முன்னேற்றத்தில் தெரிகிறது. தற்சமயத்தில் அவர் தம்மிடம் எதையும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் சமீபத்தில் தான் அவர் இரட்டை சதத்தை அடித்துள்ளார். அதே போல் ரோகித் சர்மா போன்ற அபாரமான பேட்ஸ்மேன் இருக்கும் போது இந்தியாவுக்கு பேட்டிங் மிகவும் எளிதாக மாறி விடுகிறது”

Ramiz Raja

“அவரும் இத்தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஃபுல், ஹூக் போன்ற ஷாட்களை எளிதாக அடித்த அவரால் இந்தியாவுக்கு 108 ரன்களை சேசிங் செய்வது மிகவும் எளிதாக மாறியது. இருப்பினும் இப்போதும் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் சில வீக்னஸ் உள்ளது. குறிப்பாக அவருடைய முன்னங்கால் (ப்ஃரண்ட்ஃபுட்) பேட்டிங் பலவீனமாக உள்ளது. ஆனால் அவர்களால் பின்னங்காலில் (பேக் ஃபுட்) எளிதாக அடிக்க முடிகிறது. இருப்பினும் பந்து காற்றில் மேலே வரும் போது அவர்கள் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார்கள். அந்த சமயத்தில் சில தவறுகள் ஏற்படுகிறது”

இதையும் படிங்க: அடிக்கடி பாஸ்போர்ட், போனை மறந்து ரோஹித் சர்மா அலைவார் – வைரலாகும் விராட் கோலி பேசிய 5 வருட பழைய வீடியோ

“அதே சமயம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் மறுமலர்ச்சியானது அவர்களது பந்து வீச்சின் அடிப்படையில் உருவாகி வருகிறது. ஏனெனில் அவர்கள் எப்போதும் வரலாற்றில் பேட்டிங் ரீதியில் வலுவானவர்கள்” என்று கூறினார். முன்னதாக சமீப காலங்களில் இந்தியாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்த ரமீஷ் ராஜா தற்போது மீண்டும் பாராட்டு வகையில் பேச தொடங்கியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement