- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்காக ரோஹித் சர்மா இந்த தியாகம் செய்வாரு.. பெரிய வித்யாசம் இருக்காது.. சஞ்சய் மஞ்ரேக்கர்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதை அடுத்து அடிலெய்ட் நகரில் நடைபெறும் பகல் இரவு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது. அந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாட உள்ளது.

முதல் போட்டியில் சொந்தக் காரணங்களுக்காக விளக்கிய அவருக்கு பதிலாக ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். அவருடைய தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. தற்போது ரோகித் சர்மா திரும்பியுள்ளதால் எந்த இடத்தில் பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

கேப்டன் ரோஹித்:

ஏனெனில் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக விளையாடிய கேஎல் ராகுல் 77 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதே போல அவருடன் விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 161 ரன்கள் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார். சொல்லப்போனால் அந்த ஜோடி ஆஸ்திரேலியாவில் 200க்கும் மேற்பட்ட ரன்களை (201) பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் இந்திய ஓப்பனிங் ஜோடியாகவும் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்திய அணிக்காக ரோகித் சர்மா தம்முடைய ஓப்பனிங் இடத்தை கே.எல். ராகுலுக்கு தியாகம் செய்வார் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாம் நட்சத்திர அந்தஸ்து மற்றும் தற்போது மூத்த வீரராக இருக்கும் ஒருவரை பற்றி பேசுகிறோம். அவர் தற்போது பொது அறிவு மற்றும் தற்போதைய யதார்த்தத்தின் அடிப்படையில் செல்வார் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

ஓப்பனிங் ஜோடி:

“ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட வருவார். இருப்பினும் முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் ஏற்கனவே இந்தியா பெற்றதை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் 3வது இடத்தில் விளையாடி வெற்றியில் பங்களிக்க முடியும் என்று நான் உறுதியாக நினைக்கிறேன். அதேபோல ரோஹித் சர்மா ஓப்பனிங் வீரராக விளையாடுவதற்கும் ஐந்தாவது இடத்தில் விளையாடுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது” என்று கூறினார்.

இதையும் படிங்க: எவ்ளோ கொடுத்தாலும் நான் வரமாட்டேன்.. டீலுக்கு நோ சொன்ன ஆண்ட்ரே ரசல் – விவரம் இதோ

சொல்லப்போனால் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் களமிறங்கினார். அதனால் இரண்டாவது போட்டியில் ஜெய்ஸ்வால் ராகுல் தொடர்ந்து துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரோஹித் 3 அல்லது 5வது இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -