இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்ததால் இந்த ஏல்மானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தியிருந்தது.
நோ சொன்ன ஆண்ட்ரே ரசல் :
இந்த மெகா ஏலத்தின் முடிவில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் அணிமாற்றம் செய்துள்ளதால் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்களது அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்து இருந்தாலும் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரசலை தக்கவைத்தது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தமிழக கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினுடன் கிரிக்கெட் வல்லுனர் ஒருவர் பேசுகையில் ஆண்ட்ரே ரசலை மற்றொரு அணி வாங்க முயற்சித்ததாகவும் ஆனால் அவர் அதற்கு மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
மெகா ஏலத்திற்கு முன்னதாக ரசலை 12 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி தக்க வைத்தது. ஆனால் அதற்கு முன்பே ஆண்ட்ரே ரசலை தொடர்பு கொண்ட ஒரு முன்னணி அணி அவரை கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறுமாறும் அப்படி வெளியேறினால் மிகப்பெரிய தொகைக்கு வாங்குவதாகவும் உறுதியாக அளித்தார்கள். ஆனால் ரசல் அதனை மறுத்துவிட்டார்
இதையும் படிங்க : 4 விக்கெட்ஸ்.. பாண்டியாவை கோல்டன் டக் அவுட்டாக்கிய சிஎஸ்கே வீரர் கோபால் ஹாட்ரிக்.. கலக்கல் சாதனை
நான் கே.கே.ஆர் அணியை சேர்ந்தவன் எப்பொழுதும் அந்த அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று கூறியதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணியில் இடம் பிடித்து விளையாடி வரும் ரசல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக அதே அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.