IPL 2023 : ஃபைனலில் தோனி கோல்டன் டக் அவுட்டானாலும் அதுல சொதப்பிருந்தா சிஎஸ்கே ஜெயிச்சுருக்காது – மஞ்ரேக்கர் பாராட்டு

Sanjay
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக வென்று வெற்றிகரமான அணி என்ற மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளது. குறிப்பாக குஜராத்துக்கு எதிராக அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் கடைசி பந்து வரை போராடிய சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் எடுத்த அதிரடியில் 215 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணித்தது.

அதை தொடர்ந்து மழை பெய்ததால் 15 ஓவரில் 171 ரன்கள் என்ற புதிய இலக்கை துரத்திய சென்னைக்கு ருதுராஜ் கைக்வாட் 26, டேவோன் கான்வே 47, சிவம் துபே 32*, ரகானே 27, ராயுடு 19 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை அதிரடியாக எடுக்க கடைசி ஓவரில் போராடிய மோஹித் சர்மாவின் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்ஸரையும் பவுண்டரியையும் விளாசிய ஜடேஜா சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற ரோகித் சர்மாவின் சாதனை சமன் செய்த தோனி ஃபைனலில் முக்கிய நேரத்தில் கோல்டன் டக் அவுட்டானதால் என்ன சாதித்தார் என எதிரணி ரசிகர்கள் பேசுகின்றனர்.

- Advertisement -

மாஸ் ஸ்டம்பிங்:
இருப்பினும் ஃபைனலில் சேசிங் செய்வது கஷ்டம் என்பது தெரிந்தும் மழையை கருத்தில் கொண்டு டாஸ் அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்தி முதலில் பந்து வீசியஅவரது முடிவே வெற்றிக்கு முதல் படியானது. அதை விட அகமதாபாத் மைதானத்தில் கடைசி 2 போட்டியில் அடுத்தடுத்த சதங்களை அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று உச்சகட்ட பார்மில் இருக்கும் சுப்மன் கில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இப்போட்டியிலும் அதிரடி துவங்கிய போது தீபக் சஹார் கேட்ச் விட்டார். அதனால் சென்னை ரசிகர்கள் கவலையடைந்த போதிலும் ஜடேஜாவின் சுழலில் சிக்கிய கில்லை மின்னல் வேகத்தில் வெறும் 0.1 நொடியில் ஸ்டம்ப்பிங் செய்த அவர் 39 (20) ரன்களுடன் நிறுத்தி வெற்றியில் மற்றுமொரு முக்கிய பங்காற்றினார்.

ஒருவேளை அதில் ஏதேனும் சொதப்பல் இருந்திருந்தால் கூட முந்தைய போட்டியில் மும்பையை தோற்கடித்து வெளியே அனுப்பியது போல் சுப்மன் கில் நிச்சயம் சென்னையின் வெற்றியில் விளையாடியிருப்பார் என்றால் மிகையாகாது. அப்படி ஃபைனலில் கோல்டன் டக் அவுட்டானாலும் சுப்மன் கில்லை முக்கிய சமயத்தில் அவுட்டாகிய தோனி செய்த ஸ்டம்ப்பிங் நான் பார்த்ததிலேயே மிகவும் சிறந்தது என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த பல வருடங்களில் தோனியின் நிறைய ஸ்டம்பிங்கை நான் பார்த்துள்ளேன். பெரும்பாலும் ஸ்டம்ப்களுக்கு மிகவும் அருகே இருக்கும் போது அவர் மிகவும் நெருக்கமாக வந்து பந்தை பிடித்து அடிப்பார். குறிப்பாக தோனி எப்போதும் நீங்கள் நினைப்பது போல் பந்தை முதலில் பிடித்து பின்னர் அடிக்க வேண்டும் என்ற வகையில் செயல்பட மாட்டார். மாறாக ஸ்டம்புக்கு அருகே தன்னுடைய கைகளை மிகவும் நெருக்கமாக வைத்திருந்து பந்து வந்ததும் சரியாக பிடித்து பெய்ல்ஸை நீக்கும் வேலையை மட்டுமே அவர் செய்கிறார்”

“அந்த வகையில் பொதுவாக தோனி எந்தளவுக்கு வேகமாக ஸ்டம்பிங் செய்வார் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் சுப்மன் கில்லை அவுட்டாக்கியது தோனி செய்த ஸ்டம்பிங்’களில் மிகவும் ஸ்பெஷலானதாகும். குறிப்பாக ஜடேஜா வேகமான பவுலர் என்பதால் நீங்கள் பந்தை சரியாக பிடிப்பதை தவிர்த்து வேறு ஒன்றும் செய்ய வேண்டியதில்லை”

இதையும் படிங்க:CSK : ருதுராஜ் கெய்க்வாட்டின் வருங்கால மனைவி யார் தெரியுமா? – வியவைக்கும் தகவல்கள் இதோ

“அந்த வகையில் லேசான நகர்வு இருந்ததும் தோனி பெய்ல்ஸை நீக்கி விட்டார். ஒருவேளை அந்த விக்கெட்டின் அருமையை தோனி உணர்ந்திருக்கலாம். அதனால் பந்து வீசிய ஜடேஜாவுக்கே அது அவுட்டான என்று தெரியாத அளவுக்கு தோனி வேகமான செயல்பட்டார். அதனால் தோனியிடம் அவர் அவுட்டா? என்று கேட்ட போது அவரும் உறுதியாக அவுட்டென சொன்னார்” என்று கூறினார்.

Advertisement