CSK : ருதுராஜ் கெய்க்வாட்டின் வருங்கால மனைவி யார் தெரியுமா? – வியவைக்கும் தகவல்கள் இதோ

Utkarsha-Pawar-and-Ruturaj
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது நிரந்தர துவக்க வீரராக இடம்பிடித்து விளையாடி வருகிறார். அதோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காகவும் அண்மையில் அறிமுகமான அவர் அவ்வப்போது இந்திய அணியிலும் விளையாடி வருகிறார். அதோடு இந்தாண்டு நடைபெற்று முடிந்த நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Ruturaj Gaikwad

- Advertisement -

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 42 ரன்கள் என்கிற சராசரியுடன் 490 ரன்களை குவித்து அசத்தினார். இந்த ஆண்டு சென்னை அணி 5 ஆவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்ற இவரும் ஒரு காரணம் என்றால் அதுமிகையல்ல. அந்த அளவிற்கு அவர் இந்த சீசனில் சி.எஸ்.கே அணிக்காக சிறப்பான துவக்கத்தை அளித்திருந்தார்.

அதோடு எதிர்வரும் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியிலும் அவர் கூடுதல் ஸ்டான்ட் பை வீரராக இடம்பிடித்திருந்தார். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டார்.

Utkarsha Pawar

இப்படி திடீரென இந்திய அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் வெளியேற காரணம் யாதெனில் : ஜூன் மாதம் முதல் வாரத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள வேளையில் ஜூன் 3-4 ஆகிய தேதிகளில் அவரது திருமணம் நடைபெறவுள்ளது. அதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்துகொள்ளப்போகும் அந்த பெண் யார்? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதற்கான விளக்கத்தை இங்கே நாங்கள் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி ருதுராஜின் வருங்கால மனைவியின் பெயர் : உட்கர்ஷா பவார். கடந்த 1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி அவர் புனே நகரில் பிறந்துள்ளார்.

இதையும் படிங்க : நாட்டை விட ஐபிஎல் பெருசா போச்சா? வாயை விட்டு மட்டிய டேவோன் கான்வே – நியூஸி ரசிகர்கள் எதிர்ப்பால் யூடர்ன் கருத்து

சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த அவர் தனது 11-ஆவது வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வருகிறார். அதோடு மகாராஷ்டிரா மாநில பெண்கள் அணிக்காகவும் அவர் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளரான இவர் பிட்னஸ் குறித்த பட்டபடிப்பினையும் முடித்துள்ளார். மஹாராஷ்டிரா அணிக்காக ஆண்கள் கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட்டும், பெண்கள் அணிக்காக உட்கர்ஷா பவாரும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement